உ.பி.யில் அட்டூழியம்: பெண் கவுன்சிலர் மீது ஆசிட் வீசிய 2 பேர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண் கவுன்சிலர் மீது இருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள பரித்பூரைச் சேர்ந்தவர் மஸ்கன் தேவி(35). பாரா பகுதி கவுன்சிலர். அவரது கணவர் சோனு. தேவியும் சோனுவும் சேர்ந்து வீட்டிலேயே கடை நடத்தி வந்துள்ளனர். அப்போது பணம் தொடர்பாக சிலருக்கும் அவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ராம்தாஸ் மற்றும் அரவிந்த் ஆகியோர் நேற்று இரவு மஸ்கன் தேவியின் உடல் மற்றும் மர்ம உறுப்பு பகுதியில் ஆசிடை வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அதில் ஒருவரை கைது செய்துவிட்டதாகவும், மற்றொருவரை தேடி வருவதாகவும் எஸ்.பி. ப்ரிஜேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+