3 மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகனங்களுக்கு ஆர்.சி வழங்குவது திடீர் நிறுத்தம்...
Recommended Video
டெல்லி: அனைத்து வகையான மோட்டார் வாகனங்களுக்கும் பதிவு சான்றிதழ் வழங்குவது நாடு முழுவதும் நேற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாஹன் (VAHAN) தரவுத்தளத்துடன் உயர் பாதுகாப்பு பதிவெண் பிளேட்டுகள் ஒருங்கிணைக்கப்படாத காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள போக்குவரத்து ஆணையர் மற்றும் செயலாளரான அதிகாரி ராஜீவ் புத்தாலாத், வாகனம் பதிவு செய்வதற்கான போக்குவரத்து மிஷன் திட்டத்தின் பான்-இந்தியா விண்ணப்ப முறைக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மத்திய அமைச்சக உத்தரவின் பேரில் தேசிய தகவல் மையம் தகவல்களை அளிக்க இன்னும் அனுமதிக்கவில்லை

எனவே தற்காலிகமாக நாடு முழுவதும் மோட்டார் வாகனங்களுக்கும் பதிவு சான்றிதழ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார். இந்த கடுமையான நடவடிக்கை மூலம், எந்த மாநிலத்திலும் புதிய மோட்டார் வாகனங்களுக்கு ஆர்.சி. வழங்கப்படாது. ஆனால் இதற்கு மத்தியப் பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் விலக்கு.
ஏனெனில் இந்த மூன்று மாநிலங்களும் 'வாகன்' தரவுதளத்திற்கு பதிலாக தங்கள் சொந்த மென்பொருளை பயன்படுத்துகின்றன. ஆகையால் மேற்கண்ட 3 மாநிலங்களில் மட்டும் புதிதாக பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு ஆர்.சி தொடர்ந்து வழங்கப்படும் என தெரிகிறது
போலியான வாகன பதிவெண் தட்டுகளை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல், விற்பனைக்கு வரும் புதிய வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகளானது, வாகனத்திலிருந்து அகற்ற முடியாத, மறுமுறை பயன்படுத்த இயலாத வகையில் வாகனத்துடனேயே பொருத்தப்பட்டு வரும்.
உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகளின் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், மாநில அரசின் அங்கீகாரம் பெற்றிருக்கும் பட்சத்தில் பழைய வாகனங்களுக்கும் அவற்றை விநியோகிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications