ஐபிஎல்லில் பெட்டிங்.... நடிகர் அர்பாஸ் கானுக்கு போலீஸ் சம்மன்!
கடந்தாண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது பெட்டிங் நடந்தது தொடர்பாக நடிகர் அர்பாஸ் கானுக்கு போலீசார் சம்மன்
மும்பை: கடந்தாண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது பெட்டிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான விசாரணைக்கு வரும்படி பிரபல நடிகர் அர்பாஸ் கானுக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
ஐபிஎல் சீசன் 11 சமீபத்தில் முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது.
இந்த நிலையில், மும்பை போலீசார் நடத்திய சோதனைகளில், கடந்த ஆண்டு நடந்த 10வது சீசனின்போது பெட்டிங் சூதாட்டம் மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர்.

இந்த பெட்டிங் கும்பலின் முக்கியமானவரான ஜலான் என்பவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெட்டிங்கில் ரூ.100 கோடிக்கு மேல் புழங்கியது தெரியவந்தது.
மேலும் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களுக்கும் இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த விசாரணையில், நடிகர் அர்பாஸ் கானுக்கும் இந்த பெட்டிங்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து விசாரணைக்கு வரும்படி, நடிகர் அர்பாஸ் கானுக்கு, மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பிரபல நடிகர் சல்மான் கானின் தம்பியான அர்பாஸ் கான், பல படங்களில் நடித்துள்ளார். படங்கள் தயாரித்துள்ள அவர், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications