ஜியா கான் பற்றி கேட்ட பெண் நிருபரைத் தாக்கி, கேமராவை உடைத்த நடிகர் ஆதித்யா
மும்பை: பாலிவுட் நடிகை ஜியா கான் குறித்து அவரது காதலர் சூரஜ் பஞ்சோலியின் தந்தையும், நடிகருமான ஆதித்யா பஞ்சோலியிடம் கேள்வி கேட்ட பெண் நிருபர் தாக்கப்பட்டார்.
பாலிவுட் நடிகை ஜியா கான் தனது காதல் வாழ்க்கை கசந்ததால் தான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. இதையடுத்து ஜியாவை தற்கொலைக்கு தூண்டியதற்காக அவரது காதலர் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜியா கானின் தாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கொலை
ராபியா தாக்கல் செய்த மனுவில், தனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் பெல்ட்டால் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆதித்யா பஞ்சோலி
ஜியா கான் விவகாரம் குறித்து ஜீ நியூஸின் நிருபர் உனைசா சூரஜின் தந்தையும், நடிகருமான ஆதித்யா பஞ்சோலியை நேற்று சந்தித்து கேள்வி கேட்டார்.

நிருபர் தாக்குதல்
ஜியா பற்றி கேட்டதும் ஆத்திரம் அடைந்த ஆதித்யா ஜீ நியூஸ் நிருபரை திட்டிவிட்டு அவரது கையை கதவுக்கிடையே வைத்து திறந்து, திறந்து மூடியுள்ளார். இதில் நிருபருக்கு கையில் காயம் ஏற்பட்டு மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆதித்யா நிருபரை தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவர் வைத்திருந்த கேமராவை பறித்து உடைத்துவிட்டார்.

ஏற்கனவே
ஆதித்யா தனது பக்கத்து வீட்டுக்காரரான பார்கவ் பட்டேலை தாக்கியது தொடர்பாக அவர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications