மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு விவகாரம்: மத்திய அமைச்சர் சுஷ்மாவுடன் அ.தி.மு.க. எம்.பிக்கள் சந்திப்பு
டெல்லி: தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று சந்தித்தனர்.
தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்வதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்து வைத்துக் கொள்வதும் தொடர் கதையாகிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

2011ஆம் ஆண்டு முதல் மொத்தம் 73 கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்பியிருப்பதாக முதல்வர் ஜெயலலிதாவே வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் மத்திய அரசு இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
இதனிடையே மீனவர் பிரச்சனை தொடர்பாக தமிழக எம்.பி.க்கள், மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை வரும் 31-ந் தேதி சந்திக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று முன் தினம் கூறியிருந்தார். இதன் பின்னர் தமிழக மீனவர்கள் 86 பேரை இலங்கை அரசு விடுதலை செய்ய இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவுத்தார். அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை டெல்லியில் நேரில் சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா அளித்த கடிதம் சுஷ்மாவிடம் கொடுக்கப்பட்டது.
இலங்கையில் உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுவிப்பதுடன் அவர்களது படகுகளையும் மீட்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சுஷ்மாவிடம் அ.தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கடிதத்தை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கொடுத்தோம். மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான். இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
பிரதமர் அளித்த உறுதிமொழியின் படி ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்போம் என சுஷ்மா உறுதியளித்துள்ளார் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications