கர்நாடகாவில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி.. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

  கர்நாடகாவில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி..

  பெங்களூரு: கர்நாடகாவில் அதிமுக சார்பில் 20 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

  கர்நாடக மாநில சட்டசபைக்கு வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  ADMK will contest in the Karnataka assembly election at double leaf symbol: Pugazhendi

  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி கர்நாடகாவில் 20 தொகுதிகளில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.

  தமிழகத்தில் தான் அதிமுகவின் சின்னம் இரட்டை இலை பிற மாநிலங்களுக்கு அதுபொருந்தாது என்றும் புகழேந்தி கூறினார். இரட்டை இலைச்சின்னத்தை தேர்தல் ஆணையம் ஈபிஎஸ் ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியுள்ளது.

  இந்நிலையில் தினகரனின் ஆதரவாளராக புகழேந்தி அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Dinakran supporter pugazhendi says ADMK will contest in the Karnataka assembly election at double leaf symbol. He also says in Tamil Nadu only double leaf symbol is for ADMK.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற