சுஷ்மாவின் அனல் உரையை கண்கள் "வியர்க்க" பார்த்து பெருமிதம் அடைந்த அத்வானி!
டெல்லி: லோக்சபாவில் இன்று காங்கிரஸைக் குறி வைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடுமையாக வாதம் புரிந்ததைப் பார்த்து அவரது குருவும், மூத்த பாஜக தலைவருமான அத்வானி கண்கள் கலங்க சுஷ்மாவைப் பார்த்து பெருமிதம் அடைந்தார். பேசி முடித்து அமர்ந்த சுஷ்மாவை வாயாரப் பாராட்டவும் அவர் தவறவில்லை.
லோக்சபா இன்று அமளி துமளியாகி விட்டது. காங்கிரஸ் தரப்பில் கடுமையான புகார்களை ஒருபக்கம் அடுக்க, அதற்கு, சுஷ்மா சுவராஜ் அனல் பறக்க பதிலளிக்க பெரும் விவாதக் களமாகி விட்டது லோக்சபா.

சுஷ்மா சுவராஜ், லலித் மோடியின் மனைவிக்கு உதவிய விவகாரத்தில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இன்று அந்த விவகாரத்தில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் விவாதத்திற்கு அனுமதி அளித்தார்.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கடும் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி விவாதத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கு சுஷ்மா சுவராஜ் அனல் பறக்க பதிலளித்தார்.
அவரது பதிலுரையின்போது, மறைந்த ராஜீவ் காந்தி தொடங்கி விடாமல் புகார்களை அடுக்கி காங்கிரஸாரை கொந்தளிக்க வைத்து விட்டார். குறிப்பாக ராஜீவ் காந்தி போபார்ஸ் ஊழல் நாயகன் குவாத்ரோச்சியிடமிருந்து பணம் பெற்றார் என்று அவர் கூறியபோது சோனியா காந்தி கொந்தளித்து போராட்டத்தில் குதித்தார். ஆனாலும் விடாமல் தனது பேச்சைத் தொடர்ந்தார் சுஷ்மா.
அவர் பேசப் பேச அருகில் அமர்ந்திருந்த மூத்த தலைவர் அத்வானி கண்களில் நீர் கட்டிக் கொள்ள மேசையைத் தட்டியபடியும், கைகளை தட்டியபடியும் சுஷ்மாவின் பதிலுரையைப் பாராட்டிக் கொண்டிருந்தார். அவரது முகமே உணர்ச்சிகரமாக இருந்தது. நமது சிஷ்யை என்னா போடு போடுகிறார் என்ற பெருமிதத்துடன் அவர் சுஷ்மா பேச்சைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அரை மணி நேரம் அனல் பறக்கப் பேசிய சுஷ்மா பின்னர் அமர்ந்தபோது, அவரை வெகுவாகப் பாராட்டினார் அத்வானி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications