‘தமிழர்’ சுந்தரராஜ்- பேரை சொன்னாலே அதிருதே சத்தீஸ்கர்.. 29 மாவோயிஸ்டுகளை கதற கதற போட்டுத் தள்ளியவர்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 29 மாவோயிஸ்டுகளை ஒரே என்கவுண்ட்டரில் அழித்தொழித்த பஸ்தார் மண்டல ஐஜி தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தரராஜ் பட்டிலிங்கம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ந் தேதி நடைபெற்றது. லோக்சபா தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என காடுகளில் பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் பொதுமக்களை மிரட்டி வந்தனர்.

உஷார் நிலையில் பாதுகாப்பு படை: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலின் போது வெறியாட்டம் போட்டிருந்தனர் மாவோயிஸ்டுகள். இம்முறை மாவோயிஸ்டுகள் தலை எடுத்துவிடக் கூடாது என்பதில் பாதுகாப்புப் படையினர் உறுதியாகவும் முன்னெச்சரிக்கையாகவும் இருந்தனர். இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மற்றும் கான்கேர் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாதுகாப்புப் படையினர் பெரும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

செம்ம வேட்டை: பஸ்தார், கான்கேர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த மிகப் பெரிய தேடுதல் நடவடிக்கையில்தான் மாவோயிஸ்டுகளுடன் பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்களில் ஒரே நாளில் 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை மொத்தம் 79 மாவோயிஸ்டுகள் அழித்தொழிக்கப்பட்டுள்ளனர். 2019-ம் ஆண்டு 65 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மாவோயிஸ்டுகள் அழித்தொழிப்பு நடவடிக்கை உச்சத்தை எட்டியுள்ள்து.

மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை: மாவோயிஸ்டுகள் தற்போது 29 பேர் படுகொலைக்கு பழிவாங்கும் என எச்சரித்துள்ளனர். ஆனால் இதனை எல்லாம் பொருட்படுத்த தேவை இல்லை..இந்த மிரட்டல்களை எதிர்கொள்வோம் என்கின்றனர். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இந்த மிகப் பெரும் நடவடிக்கைக்கு தலைமை வகித்தவர் பஸ்தார் மண்டல ஐஜியாக இருக்கும் சுந்தரராஜ் பட்டிலிங்கம். ஆம் தமிழரான இவர் கோவை மாவட்டம் சரவணம்பட்டியைச் சேர்ந்தவர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்.

ஐஜி சுந்தரராஜ்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் கோட்டையாக இருந்த பஸ்தாரில் 2004-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். துணை காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியை தொடங்கிய சுந்தரராஜ் தற்போது பஸ்தார் மண்டல் ஐஜியாக பொறுப்பு வகிக்கிறார். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையை எப்படி ஒருங்கிணைத்தால் எப்படி வெல்ல முடியும் என்ற வியூகம் அறிந்தவர். இந்த வியூகத்துக்குதான் இவ்வளவு பெரிய 'வேட்டை' கிடைத்துள்ளது. 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மாவோயிஸ்டுகள் பஸ்தாரில் கோரத்தாண்டவம் ஆடி பல நூறு பாதுகாப்புப் படையினரின் ரத்தம் குடித்திருந்த கொடூர காலம். அந்த காலத்திலும் மாவோயிஸ்டுகளை எதிர்கொண்டவர் தற்போதைய ஐஜி சுந்தரராஜ்.
4 மணிநேர மோதல்: மாவோயிஸ்டுகளை வேட்டையாடியது குறித்து கூறுகையில், மாவோயிஸ்டுகளுடன் 4 மணிநேரம் மோதல் நீடித்தது. கொல்லப்பட்ட 29 மாவோயிஸ்டுகளில் 15 பேர் பெண்கள். இவர்களிடம் இருந்து பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.
மாவோயிஸ்டுகள் தோல்வி ஏன்?: மேலும் மாவோயிஸ்டுகள் முதலில் மாவோயிசம் எனப்படும் இடதுசாரி தத்துவத்தின் அடிப்படையில் அரசுகளுக்கு எதிராக ஆயுதப் புரட்சியை முன்னெடுத்தனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மாவோயிஸ்டுகள் தங்களது அரசியல் சித்தாந்தத்தைக் கைவிட்டு விட்டு பெரு நிறுவனங்களிடம் இருந்து பணம் பறிப்பவர்களாக உருமாறி நிற்கின்றனர். மேலும் மாவோயிஸ்டுகளின் பக்கம் நின்ற ஆதி பழங்குடி மக்களும் பொது நீரோட்டத்தில் இணைந்து வனப் பகுதிகளை விட்டு விட்டு வெளியேறி வருகின்றனர்.
வென்றது எப்படி?: இன்னொரு பக்கம் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மாவோயிஸ்டுகளை வேட்டையாட முன்னெப்போதையும் விட லட்சக்கணக்கான பாதுகாப்பு படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையிதான் தாம் நீண்டகாலம் செயல்படதன் அடிப்படையில் வியூகம் வகுத்து மாவோயிஸ்டுகளை கொத்து கொத்தாக வேட்டையாடி இருக்கிறார் பஸ்தார் ஐஜியான தமிழர் சுந்தரராஜ் பட்டிலிங்கம்.
வரலாற்று வெற்றி: மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இந்த மகத்தான வேட்டையை மத்திய அரசும் சத்தீஸ்கர் மக்களும் கொண்டாடுகின்றனர். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்கின்றனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications