For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் அடுத்தடுத்து சர்ப்ரைஸ்களால் ஆடிப்போன சீனா.. சூசுலில் படைகள் குவிப்பு.. தொடரும் பதற்றம்!

Google Oneindia Tamil News

லடாக்: லடாக்கில் சீனாவிற்கு இந்திய படைகள் கொடுத்த அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களால் அந்த நாட்டின் பிஎல்ஏ ராணுவம் அதிர்ச்சியில் இருக்கிறது. இதனால் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் கூடுதல் படை வீரர்களை சீனா களமிறக்கி உள்ளது.

Recommended Video

    Ladakh- ல் India களமிறக்கிய SFF படை.. கலக்கத்தில் China

    லடாக்கில் கடந்த 5 நாட்களாக மீண்டும் பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த முறை பேச்சுவார்த்தை மூலம் நிலைமை சரியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. லடாக்கில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சீனா அத்துமீற முயன்றது.

    ஆனால் சீனாவின் முயற்சியை முன்பே தெரிந்து கொண்ட இந்தியா, சீனாவின் ஊடுருவலை தடுத்து நிறுத்தியது. சீனா இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீண்டு வரவில்லை.

    ரஷ்யா சென்ற ராஜ்நாத் சிங்.. அவசர பேச்சுவார்த்தைக்கு அழைத்த சீனா.. மாஸ்கோவில் அடுத்தடுத்த திருப்பம்!ரஷ்யா சென்ற ராஜ்நாத் சிங்.. அவசர பேச்சுவார்த்தைக்கு அழைத்த சீனா.. மாஸ்கோவில் அடுத்தடுத்த திருப்பம்!

    மூன்று சர்ப்ரைஸ்

    மூன்று சர்ப்ரைஸ்

    லடாக் எல்லையில் சீனாவிற்கு இந்தியா மூன்று சர்ப்ரைஸ்களை கொடுத்தது என்று கூட கூறலாம். முதலில் லடாக்கில் சீனாவின் படைகள் கடந்த 29/30 தேதிகளில் ஆக்கிரமிக்க முயன்றது. ஆனால் இதை உளவு தகவல்கள் மூலம் இந்தியா கண்டுபிடித்தது. சீனாவின் ஆக்கிரமிப்பை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, சீனா பாங்காங் திசோவில் ஆக்கிரமிப்பை செய்யும் முன்பே இந்தியா அங்கே முன்கூட்டியே சென்று ஆக்கிரமிப்பு செய்தது.

    இரண்டாவது சர்ப்ரைஸ்

    இரண்டாவது சர்ப்ரைஸ்

    அதே நாளில் லடாக்கில் பாங்காங் திசோவில் இருக்கும் தெற்கு பகுதிகளை இந்தியா பிடித்தது. இதை சீனா கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அதோடு ரோந்து பணிகளை செய்து வந்த இந்தியா ''border secure mode'' எனப்படும் பாதுகாப்பு மோடிற்கு மாறியது. இதனால் இனி ரோந்து மட்டுமின்றி எல்லையில் தேவையான இடங்களை பிடிக்கவும் ராணுவம் களமிறக்கப்படும்.. சீனா ஆக்கிரமிப்பதை தடுத்து இந்தியா அந்த இடங்களை பிடிக்கும்!

    மூன்றாவது சர்ப்ரைஸ்

    மூன்றாவது சர்ப்ரைஸ்

    மூன்றாவது சர்ப்ரைஸ் என்று பார்த்தால், லடாக்கில் பாங்காங் திசோ அருகிலும், டெப்சங் அருகிலும் இருக்கும் மலைகளை இந்தியா பிடித்துள்ளது. சீனாவின் கண்ணில் மண்ணை தூவி கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமை அன்று மலைகளை இந்தியா பிடித்தது. எந்த இடத்தை பிடித்தால் போர் வரும் போது வசதியாக இருக்குமோ, தாக்குதல் நடத்த எளிதாக இருக்குமோ அந்த இடங்களை எல்லாம் சீனா பிடித்து இருக்கிறது.

    சீனா எதிர்பார்க்கவில்லை

    சீனா எதிர்பார்க்கவில்லை

    எல்லையில் ஆக்கிரமிக்கலாம் என்று நினைத்த சீனாவிற்கு இந்த விஷயங்கள் எல்லாம் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. இதனால் சீனா தற்போது எல்லையில் எப்படியாவது முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது. இந்திய படைகள் புதிய இடங்கள் எதையும் பிடித்து விட கூடாது. கவனமாக செயல்பட வேண்டும். புதிய இடங்களை இந்தியா பிடிக்காத வகையில் படைகளை குவிக்க வேண்டும் என்பதில் சீனா உறுதியாக உள்ளது.

    படைகள் குவிப்பு

    படைகள் குவிப்பு

    இதனால் தற்போது லடாக்கில் முக்கியமான இடங்களில் சீனா படைகள் குவித்துள்ளது. சூசுல் பகுதியில் சீனா படைகளை குவித்துள்ளது. பொதுவாக இங்குதான் அமைதி பேச்சுவார்த்தை நடக்கும். தற்போது இதே இடத்தில் சீனா படைகளை குவித்துள்ளது. இங்கிருந்து பாங்காங் திசோவின் அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளுக்கும் செல்ல முடியும். எளிதாக படைகளை பாங்காங் திசோ நெடுகே அனுப்ப முடியும். இதனால் இங்கு சீனா படைகளை குவித்துள்ளது.

    இன்று மீட்டிங்

    இன்று மீட்டிங்

    இந்த பகுதியில் இன்று அமைதி பேச்சுவார்த்தைக்கான மீட்டிங் நடக்க உள்ளது. இந்த நிலையில் சீனா அங்கு படைகளை குவித்து உள்ளது கேள்விகளையே எழுப்பி உள்ளது. அதேபோல் பாங்காங் திசோவில் கட்டுப்பாட்டு பகுதி 4ல் சீனா படைகளை குவித்துள்ளது. இந்த பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வரும் பகுதி ஆகும். இங்கு சீனா படைகளை குவித்து உள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    After India's surprise in south bank and heights, China brings force to Chushul point.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X