For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்டம் விட்டு கண்டம் பாயும் 'அக்னி- 5' ஏவுகணை அடுத்த மாதம் சோதனை!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை சோதனையானது அடுத்த மாதம் நடக்க உள்ளது.

அக்னி ஏவுகணை வரிசையில் அக்னி-1, 700 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடியது.

அக்னி-2 - 2 ஆயிரம் கிலோ மீட்டரும், அக்னி-3 மற்றும் அக்னி-4 முறையே 2,500 கிலோ மீட்டர், 3,500 கிலோ மீட்டருக்கு மேல் சென்று தாக்கக் கூடியவைகளாகும்.

அக்னி 5 ஏவுகணை:

அக்னி 5 ஏவுகணை:

ஏவுகணை தொழில்நுட்பத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அக்னி-5 ஏவுகணையை இந்திய ராணுவம் அதி நவீனமானதாக தயாரித்துள்ளது.

இரும்பு ஏவுதளம்:

இரும்பு ஏவுதளம்:

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன்பெற்ற இந்த அக்னி 5 ஏவுகணை ஏற்கனவே 2 முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. 3 ஆவது முறையாக ஒரு இரும்பு ஏவுதளத்தில் இருந்து ஏவி சோதனை நடத்தப்பட உள்ளது.

பலமுனை ஏவுதளம்:

பலமுனை ஏவுதளம்:

இந்த ஏவுகணையை ஏவும் தளத்துடன் சேர்த்து ஒரு வாகனத்தில் வைத்து ஏவும் இடத்துக்கு சுலபமாக எடுத்துச்செல்ல முடியும். மிகவும் விரைவாகவும், பலமுனை ஏவுதளத்தில் இருந்தும் இதனை ஏவ முடியும்.

5 ஆயிரம் கிலோ மீட்டர் தாக்குதல்:

5 ஆயிரம் கிலோ மீட்டர் தாக்குதல்:

இந்த அக்னி 5 ஏவுகணை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கக்கூடியது. இந்தியாவில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகரையோ, அதற்கு இடையே உள்ள எந்த ஒரு நகரையோ தாக்கdல்லது.

உந்தித் தள்ளும் ஏவுகணை:

உந்தித் தள்ளும் ஏவுகணை:

3 அடுக்குகளை கொண்ட இந்த ஏவுகணை ஒரு டன் அளவுக்கு வெடிக்கும் முன்பகுதியை கொண்டது. இந்த ஏவுகணை முதலில் ஏவுதளத்தில் இருந்து 30 மீட்டர் உயரத்திற்கு உந்தித்தள்ளும். அதன்பின்னர் மோட்டார் ஏவுகணையை பற்றவைக்கும்.

மூன்றாம் கட்ட சோதனை:

மூன்றாம் கட்ட சோதனை:

இவ்வளவு சக்திவாய்ந்த அக்னி 5 ஏவுகணையின் மூன்றாம்கட்ட சோதனை அடுத்த மாத இறுதியில் நடைபெற இருப்பதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
“Agni – 5” missile is going to be test again next month, Indian military research academy says. It is a missile, which can hit one Continent to another.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X