தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி வழக்கு: மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ்
ஆக்ரா: தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் அமைந்துள்ளது. இந்த தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் எனக்கூறி வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின் தலைமையில் 6 வழக்கறிஞர்கள் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

அம் மனுவில், 1212-ம் ஆண்டு ராஜாபரமர்திதேவ் சிவன் கோவிலை கட்டினார். பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜாமான்சிங் இதை கைப்பற்றினார். அவருக்குப்பின் அதை ராஜா ஜெய்சிங் நிர்வகித்தார்.
1632-ம் ஆண்டு ஷாஜகான் இதை கைப்பற்றினார். அதன் பிறகு அங்கு மும்தாஜின் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு முகலாய பாணிக்கு கட்டிடங்களில் மாற்றம் செய்யப்பட்டது எனக் கூறியுள்ளனர்.
இம் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இது குறித்து அடுத்த மாதம் 6-ந் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, உள்துறை செயலாளர் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
பின்னர் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே 13-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications