உ.பி.யில் பயங்கரம்: தலித் பெண்ணை சீரழித்து உடலை துண்டு துண்டாக வெட்டி எரித்த ரவுடி கும்பல்
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் ரவுடிகள் சிலர் தலித் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து அவரை கொன்று அவரின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி எரித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமா. தலித் பெண்ணான அவர் குவாலியர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ககுவா கிராமத்தில் வசித்து வந்தார். 40களில் இருந்த அவர் தனது கணவர் ஹேம்ராஜ் மற்றும் 12 வயது மகளுடன் வசித்து வந்தார். அவர்களின் மகன் ஹேம்ராஜின் பெற்றோருடன் ஜான்சியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேமா தனது கணவர், மகளுடன் ஜான்சிக்கு சென்றார். ஆனால் அவர் மட்டும் கிராமத்திற்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் சில ரவுடிகள் ஹேமாவை பாலியல் பலாத்காரம் செய்து அவரை கொலை செய்துள்ளனர். மேலும் ஹேமாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர்.
ஊரில் இருந்து திரும்பிய ஹேம்ராஜ் வீடு வெளியே இருந்து பூட்டியிருந்ததால் ஓட்டை பிரித்து உள்ளே சென்றார். அப்போது கட்டிலில் ஹேமாவின் உடல் வெட்டப்பட்டு பாதி எரிந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முயன்றார். அப்போது கிராமத்து தலைவர் மற்றும் சிலர் சேர்ந்து ஹேம்ராஜை போலீசுக்கு போகவிடாமல் தடுத்து ஹேமாவின் பாதி எரிந்த உடலை எரித்தனர்.
இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்த நிலையில் இருந்த ஹேமாவின் உடலை கைப்பற்றினர். சம்பவ இடத்தில் பல ஆணுறைகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications