ரிவால்வர் ராணி.. பெண் போலீஸின் அதிர்ச்சி வீடியோ.. வெயிட்டிங் லிஸ்ட் வரை சென்ற விவகாரம்..!
துப்பாக்கியுடன் பெண் போலீஸ் பதிவிட்ட வீடியோ வைரலாகிறது
ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் பணியாற்றி வரும் ஒரு பெண் போலீஸ்.. கையில் துப்பாக்கியுடன் எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. இது அவருக்கு சிக்கலை கொடுத்து உள்ளது.
டிக்டாக் ஆப்பை தடை செய்தாலும், அதன்மீதான மோகம் இன்னும் பலருக்கு குறையவில்லை.. டிக்டாக்கில் லைக்ஸ்களை அள்ளுவதற்காக வரம்பு மீறி அட்டகாசம் செய்து கொண்டிருந்தவர்கள், இப்போது அப்படியே யூடியூப் பக்கம் தாவி வருகின்றனர்.
தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஏராளமானோர் வீடியோக்களை பதிவிட்டு வரும்நிலையில், இந்த ஆசை காவல்துறையையும் விட்டுவைக்கவில்லை.. அந்த வகையில், பெண் போலீஸ் ஒருவர், வீடியோ போட்டு தனக்கு தானே வேலையில் சிக்கலை இழுத்து கொண்டுள்ளார்.

ஆக்ரா
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் எம்எம் கேட் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வருகிறது.. இங்கு கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வரும் பெண் பெயர் பிரியங்கா மிஸ்ரா... இவர் கடந்த 21ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அதில் யூனிபார்முடன் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு "ரங்க்பாஸி" பற்றிய வசனத்துக்கு வாயசைத்து அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

வசனம்
அந்த வீடியோ வைரலாகி பலருக்கும் அதிர்ச்சியை தந்தது.. அந்த வீடியோ 37 வினாடி ஓடுகிறது.. ''உபியில், 5 வயது குழந்தைகளுக்கும்கூட துப்பாக்கிகளுடன் விளையாடத் தெரியும்" என்று அந்த வசனம் இருக்கும்.. இதை ஒரு பெண் போலீஸே கையில் துப்பாக்கியுடன் பேசுவதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. எதிர்மறை விமர்சனங்களும் கிளம்பியது..

வீடியோ
இந்த வீடியோ ஆக்ரா போலீசாரின் கவனத்துக்கும் வந்தது.. இதையடுத்து, ஆக்ராவின் எஸ்எஸ்பி எனப்படும் காவல் கண்காணிப்பாளர் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார்... மேலும் பிரியங்கா மிஸ்ரா காத்திருப்போர் பட்டியலிலும் வைக்கப்பட்டுள்ளார்... அதுமட்டுமல்ல, அந்த ரிவால்வர் பெண் போலீசுக்கு வழங்கப்படவே இல்லை..

விதிமீறல்
அவருக்கு வழங்கப்படாத ரிவால்வரை கொண்டு வீடியோ வெளியிட்டது விதிமீறலையும் வெளிக்காட்டியுள்ளது... நாலாபக்கமிருந்தும் கடுமையான விமர்சனங்கள் கிளம்பியதையடுத்து, அந்த வீடியோ இன்ஸ்ட்டாகிராமில் இருந்து பிரியங்கா மிஸ்ரா நீக்கி உள்ளார்.. துறை ரீதியான நடவடிக்கைகள் முடிந்தபிறகு, பெண் போலீஸ் தன்னுடைய பணியில் மீண்டும் இணைவார் என்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications