கால்வாசி கிணறுதான் தாண்டியுள்ளோம்... "தேசிய வங்கிக் கடன்களும் தள்ளுபடி செய்யும் வரை போராட்டம்"
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
டெல்லி: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை மட்டும் தளளுபடி செய்தால் போதாது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று டெல்லியைக் கலக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 நாள்களாக விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க எலிக்கறி, பாம்புக் கறி திண்பது, அரை மொட்டை அடித்துக் கொள்வது, பாதி மீசையை எடுத்துக் கொள்வது உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். எனினும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் போராட்டம் நாளுக்கு நாள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கடந்த 2016-இல் தமிழக அரசு ஆணை பிறப்பித்ததை எதிர்த்து அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளித்தது.
சிறு,குறு விவசாயிகள் பெற்ற கடன் மட்டுமின்றி அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய அய்யாக்கண்ணு தனது மனுவில் கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் ரத்து செய்ய உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். எனினும் இது மட்டுமே போதாது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களையும் மத்திய அரசு தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications