மகாராஷ்டிராவில் கோர விபத்து: 500 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவர்கள் 33 பேர் பலி!
மகாராஷ்டிராவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 33 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
ராய்காட்: மகாராஷ்டிராவில் சுற்றுலா பேருந்து 500 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 33 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மகாராஷ்டிரா மாநிலம் டபோலி வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசியர்கள் பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்றனர்.

ராய்காட் மாவட்டத்தில் அவர்களின் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மகத்- பொலட்பூர் இடையே மலைப்பகுதியில் சென்றபோது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
நிலைத்தடுமாறிய பேருந்து 500 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இதில் பேராசியர்கள் மாணவர்கள் என 33 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பேருந்தில் 34 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. இந்த விபத்தில் பிரகாஷ் சாவந்த் என்ற மாணவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
புனேவில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் உடல்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர் கொத்தாக பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications