பெங்களூர் போலீஸாரின் 10 சீருடைகள் மாயம்.. வாங்கியது யார்?.. மோடி வருகையால் பதட்டம்!

சிவாஜி நகரைச் சேர்ந்த ஒரு டெய்லரிடமிருந்து இந்த சீருடைகளை சிலர் வாங்கிச் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் போலீஸார் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. எனவே சீருடைகளை வாங்கி் சென்றது யார், எதற்காக வாங்கிச் சென்றனர் என்பது மர்மமாக உள்ளது.
சீருடைகள் காணாமல் போயுள்ளதால் மோடி கூட்டத்திற்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் போலீஸாருக்கு சிறப்பு பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றனவாம்.
சிவாஜிநகரில்தான் பெங்களூர் காவல்துறையினருக்கு சீருடைகள் தைப்பது வழக்கம். குறிப்பிட்ட டெய்லர்தான் தைத்துக் கொடுப்பாராம். அந்த டெய்லரிடமிருந்துதான் ஒரு வாரத்திற்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அணுகி, 10 சீருடைகளை வாங்கிச் சென்றுள்ளார்.
தற்போது மோடி ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடைபெறும் கூட்டத்தில் பேசவுள்ளதால், இந்த சீருடைகள் திருட்டு பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சீருடைகளை வாங்கிச் சென்றவர் வயதானவர் என்றும் தன்னை வட இந்தியர் என்று கூறிக் கொண்டதாகவும் தெரிகிறது.
இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையை சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது மோடி வருகையின்போது எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் தீவிரமாக செயல்படுமாறு அவர் காவல்துறையினரைக் கேட்டுக் கொண்டாராம்.
இதுகுறித்து நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திர ஆரேத்கர் கூறுகையில், 10 சீருடைகளை ஒருவர் வாங்கிச் சென்றது உண்மைதான். இதுகுறித்துத் தகவல் வந்துள்ளது. விசாரித்து வருகிறோம் என்றார்.
சீருடைகள் மட்டுமல்லாமல், சிவாஜி நகரில் உள்ள ஒரு கடைக்குப் போனஅந்த முதியவர் போலீஸார் பயன்படுத்தும் தொப்பி, லத்தி ஆகியவற்றையும் வாங்கியுள்ளாராம். கான்ஸ்டபிள்கள் பயன்படுத்தும் தொப்பி இது என்றும்
தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெங்களூர் முழுவதும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications