அகமதாபாத் விமான விபத்து.. சிக்கிய முக்கிய ஆதாரம்.. 2 கருப்பு பெட்டியில் என்ன தகவல்கள் இருக்கும்?
அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 265ஆக உயர்ந்துள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. விமானத்தில் பயணித்த 229 பயணிகள், 2 பைலட், 10 விமான ஊழியர்கள் மட்டுமல்லாமல், 10 மருத்துவ மாணவர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் விமானத்தின் இரு பிளாக் பாக்ஸ்களும் மீட்கப்பட்டுள்ளது. அந்த பிளாக் பாக்ஸில் என்னென்ன தகவல்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 787-8 போயிங் விமானம், டேக் ஆஃப் ஆன சில நொடிகளில் விபத்துக்குள்ளானது. விமான நிலையம் அருகில் இருந்த மேகானி நகர் மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது போய் விழுந்ததில் அந்த இடத்திலேயே விமானம் வெடித்தது. இதில் ஒரேயொரு பயணியை தவிர்த்து விமானத்தில் இருந்த 241 பேரும் உயிரிழந்தனர்.

அதுமட்டுமல்லாமல் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 10 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தால் பலரும் சோகம் அடைந்துள்ளனர். இதனிடையே விமானம் விபத்தில் சிக்கியது எப்படி என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் ட்ரீம்லைனர் ரக போயிங் விமானம் விபத்தில் சிக்குவது இதுவே முதல்முறையாகும்.
இதனால் விமானத்தில் இருந்த பிளாக் பாக்ஸை கண்டறிந்து விபத்திற்கான காரணம் என்ன என்பதை அறிய வேண்டும் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் விமான விபத்திற்கு பின் நேற்று விமானத்தில் இருந்த 2 கருப்பு பெட்டிகளும் மீட்கப்பட்டுள்ளது. அந்த கருப்பு பெட்டி என்பது மின்னணு தரவு ரெக்காடர்கள் ஆகும். ஒரு கருப்பு பெட்டி விமான அறையில் இருந்து ஒலியை பதிவு செய்யும்.
பைலட்கள் பேசும் வார்த்தைகள், விமான ஊழியர்களின் உரையாடல்கள், எச்சரிக்கை ஒலிகளை பதிவு செய்து கொள்ளும். இதன் மூலமாக விமானிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும், அசாதாரண சத்தம் ஏற்பட்டால் அதை அறியவும் முடியும். மற்றொரு கருப்பு பெட்டி விமானத்தின் உயரம், வேகம் உள்ளிட்ட தரவுகளை பதிவு செய்யும்.
அதேபோல் எஞ்சின் செயல்பாடுகள், திசை, பைலட் கட்டுப்பாடு ஆகியவற்றை பதிவு செய்யும். இதனால் விரைவில் விமான விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வரும். தற்போது 2 கருப்பு பெட்டிகளும் கண்டறியப்பட்டுள்ளதால், கடைசி நேரத்தில் விமானத்தில் என்ன நடந்தது, விபத்துக்கான காரணம், தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்டவற்றில் என்ன சிக்கல் ஏற்பட்டது என்பது தெரிய வரும் என்று பார்க்கப்படுகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications