Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை! ஒரே நேரத்தில் 38 பேருக்கு தூக்கு தண்டனை! பரபர அகமதாபாத் கேஸ்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கில் ஒரே நேரத்தில் 38 பேருக்கு தூக்கு தண்டனை கொடுத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நேரத்தில் 38 பேருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இந்த குண்டுவெடிப்பு வழக்கில் மொத்தம் 11 பேருக்கு இறப்பு வரை சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2008ல் அகமதாபாத்தில் மொத்தம் 22 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

இந்த குண்டு வெடிப்பில் 56 பேர் கொல்லப்பட்டனர். 230 பேர் படுகாயம் அடைந்தனர். மொத்த தேசத்தையும் இந்த சம்பவம் உலுக்கியது. இந்த வழக்கில் மொத்தம் 77 பேர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு குஜராத், உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அகமதாபாத் குண்டு வெடிப்பு

அகமதாபாத் குண்டு வெடிப்பு

ஜூலை 26ம் தேதி 2008ல் இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பு வெறும் 70 நிமிட இடைவெளியில் 22 இடங்களிலும் ஏற்பட்டது. இந்தியன் முஜாகிதீன் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்டது. அதே சமயம் Harkat-ul-Jihad-al-Islami என்ற அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இதையடுத்து குஜராத் போலீஸ் இந்த வழக்கில் மாஸ்டர் மைண்டாக இருந்த முப்தி அபு பாஷிர் என்பவரை கைது செய்தது. அதை தொடர்ந்து அவருக்கு தொடர்புள்ள மற்ற 70க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்தது.

கைது நடவடிக்கை

கைது நடவடிக்கை

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் 2008ல் இருந்து 2016 வரை பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். அதேபோல் இந்த குண்டுவெடிப்பில் வெடிக்காத 4 குண்டுகள் மறுநாள் குஜராத் போலீஸ் கண்டுபிடித்தது. அதேபோல் குண்டு வெடிப்பிற்கு 5 நிமிடத்திற்கு முன் இன்னும் 5 நிமிடத்தில் குஜராத் கலவரத்திற்கு பழி வாங்கிவிடுவோம் என்று முஜாகிதீன் அமைப்பு பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு மிரட்டல் மெயில் அனுப்பி இருந்தது. அந்த மெயில் வந்து சில நிமிடங்களில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன வழக்கு

என்ன வழக்கு

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது பிரிவு 121-ஏ (நாட்டுக்குள் போர் தொடுப்பதற்கான சதி அல்லது தேசத்திற்கு எதிராக போர் தொடுக்கும் முயற்சி), ரிவு 16, ஐ.பி.சி. பிரிவு 302 (கொலை), உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இதை விசாரிக்க தனியாக அஹமதாபாத் சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டது. சைக்கிள்கள், பைகள், டிபன் பாக்ஸ் என்று பலவற்றில் இந்த குண்டுகள் வைக்கப்பட்டு வெடிக்கப்ட்டது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு

தீர்ப்பு

இத்தனை வருடமாக இதில் விசாரணை நடந்து வந்த நிலையில் சிறப்பு கோர்ட் நீதிபதி ஏ ஆர் பட்டேல் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளார். இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி சிறப்பு நீதிபதி 49 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார். 28 பேரை விடுதலை செய்வதாக அறிவித்தார். இந்த நிலையில் அவர்களுக்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில் 38 பேருக்கு தூக்கு தண்டனையும், 11 பேருக்கு மரணம் ஆகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

தண்டனை

தண்டனை

இந்திய வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக நபர்களுக்கு கொடுக்கப்பட்ட தூக்கு தண்டனை தீர்ப்பு இதுதான். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின் எந்த வழக்கிலும் இவ்வளவு அதிக நபர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை. அதன் பின்னர் நாட்டில் முதல் முறையாக மிக அதிக எண்ணிக்கையில் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

எத்தனை பேர் தூக்கு

எத்தனை பேர் தூக்கு

இந்திய வரலாற்றில் இதுவரை 1947க்கு பின் 720 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் 360 பேர் உத்தர பிரதேசத்தில் இருந்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள். 90 பேர் ஹரியானாவில் இருந்தும், 73 பேர் மத்திய பிரதேசத்தில் இருந்தும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள். சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக நாதுராம் கோட்ஸே, நாராயண் ஆப்தே ஆகியோர் 1949ல் ஹரியானாவில் உள்ள அம்பாலா ஜெயிலில் தூக்கு தண்டனை பெற்று கொல்லப்பட்டனர். அதன்பின் இதுவரை 720 பேருக்கு இந்தியாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனை கைதிகள்

தூக்கு தண்டனை கைதிகள்

2020 கணக்குப்படி இந்தியாவில் 404 தூக்கு தண்டனை கைதிகள் தண்டனை நிறைவேற்றப்படாமல் சிறையில் உள்ளனர். கடந்த டிசம்பரில் இந்த எண்ணிக்கை 488 ஆக உயர்ந்தது. கடந்த டிசம்பர் 2021 கணக்குப்படி உத்தர பிரதேசத்தில் 86, மகாராஷ்டிராவில் 41, மேற்கு வங்கத்தில் 38, பீகாரில் 37, மத்திய பிரதேசத்தில் 37 பேர் தண்டனை நிறைவேற்றப்படாமல் சிறையில் உள்ளனர். கடந்த 2021ல் அதிகமாக உத்தர பிரதேசத்தில் 27, பீகாரில் 27, தமிழ்நாட்டில் 15, ஆந்திராவில் 13, ஒடிசாவில் 9 பேருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

என்ன கேஸ்கள்

என்ன கேஸ்கள்

இந்தியாவில் குழந்தைகள் பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம் (போக்சோ) 2012, பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்முறை தடுப்பு) சட்டம் 1989, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967, மஹாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டம் (MCOCA) மற்றும் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் 1999 NDPS) 1985 ஆகிய சட்டங்களுக்கு மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுகிறது.

நிறைவேற்றப்படவில்லை

நிறைவேற்றப்படவில்லை

ஆனால் இந்தியாவில் கடந்த 2015க்கு பின் தூக்கு தண்டனை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 2015 ஜூலை 30ம் தெத்து யாகும் மேமன் 1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கிற்காக தூக்கு தண்டனை பெற்று கொல்லப்பட்டார். அதற்கு முன் 2013 டிசம்பரில் அப்சல் குரு 2001 பார்லிமென்ட அட்டாக் வழக்கிற்காக தூக்கு தண்டனை பெற்று கொல்லப்பட்டார். 2015க்கு பின் இந்தியாவில் யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+