எடப்பாடிக்கு பின்னடைவு: ஜூன் 23 பொதுக்குழுவுக்கு முந்தைய நிலையே நீடிக்கும் - உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிமுகவில் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்று இன்று புதன் கிழமை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்தே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தகராறில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய பின்னடைவாக வந்துள்ளது.
ஜூன் 23 பொதுக்குழுவில்தான் தமிழ்மகன் உசேனை அதிமுக அவைத்தலைவராக்கும் தீர்மானம் நிறைவேறியது. அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகுதான் அவர் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்கும் என்று அறிவித்தார். அந்த இரண்டாவது பொதுக்குழுவில்தான் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அத்துடன், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்குவதாகவும் எடப்பாடி அணி இந்த இரண்டாவது பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது.
- அதிமுக ஜூன் 23 பொதுக்குழுவில் நடந்தது என்ன? அவைத்தலைவர் நியமனம், ஓபிஎஸ் வெளிநடப்பு...
- அதிமுக ஜுலை 11 பொதுக்குழுவில் நடந்தது என்ன? இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு, ஓபிஎஸ் நீக்கம்
அதிமுகவில் நடந்த மொத்த தலைமை மாற்றக் குழுப்பங்களுக்கும் அடிப்படையாக அமைந்தது ஜூன் 23 பொதுக்குழுதான். அது நடந்ததே செல்லாது என்று கூறத்தக்க வகையில் வந்துள்ள இந்த தீர்ப்பு அதற்குப் பிறகு நடந்த எல்லா மாற்றங்களையும் இல்லாமல் செய்யும் வகையில் இருக்கும் என்று தோன்றுகிறது.
(தீர்ப்பின் முழுவிவரம் இன்று பிற்பகல் தெரிய வரலாம். அதுவரை வெளியாகும் தகவல்கள் இந்தப் பக்கத்தில் மேம்படுத்தப்படும். முழு தீர்ப்பு விவரமும் இந்தப் பக்கத்திலேயே வெளியாகும்).
https://www.youtube.com/watch?v=KjFsXITkuko
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி












Click it and Unblock the Notifications