For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தின் 'எவர்கிரீன் ஹீரோயின்' அம்மா... உணர்ச்சி வசப்பட்ட அதிமுக பெண் எம்.பி

Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடக உயர்நீதிமன்றம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்த செய்தி கேட்டு டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பிக்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதனர்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று வெளியிடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கின் அப்பீல் மனு மீதான தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

AIADMK MPs in tears after Jayalalithaa in disproportionate assets case

இதையடுத்து அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் நாடாளுமன்றத்திலும் ஜெயலலிதா விடுதலைச் செய்தி எதிரொலித்தது. அதிமுக எம்.பிக்கள் கண்ணீர் விட்டு ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.

ராஜ்யசபா எம்.பி. விஜிலா சத்தியானந்த் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அடக்க முடியாமல் அழுதார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கறுகையில், ‘புரட்சித் தலைவி அம்மாவை யாராலும் ஒருபோதும் வீழ்த்த முடியாது. அவர் தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தி. தமிழகத்தின் எவர்கிரீன் ஹீரோயின். அழரை யாராலும் வெல்ல முடியாது, அசைக்க முடியாது' என்றார்.

இதேபோல மற்ற எம்.பிக்களம் கலங்கிப் போய் மகிழ்ச்சியில் திளைத்துக் காணப்பட்டனர்.

English summary
AIADMK MPs were in tears on Monday after a special bench of the Karnataka High Court acquitted former Tamil Nadu chief minister J Jayalalithaa in the disproportionate assets case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X