பாகிஸ்தானுக்கு எதிரான போரை நிறுத்தி இருக்கவே கூடாது.. அமெரிக்கா உத்தரவாதம் தருமா? -அசாதுதின் ஒவைசி

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: பாகிஸ்தான் எதிரான போரை இந்தியா நிறுத்தியது ஏன் என்று மத்திய அரசுக்கு AIMIM கட்சித் தலைவரும் ஐதராபாத் எம்பி யுமான அசாதுதின் ஒவைசி கேள்வி எழுப்பி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மாலையில் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில் அமெரிக்காவில் தலையீட்டின் பேரில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக அவர் அறிவித்தார். இது குறித்து தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அசாதுதின் ஓவைசி, பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Asaduddin owaisi

"அதில் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை தங்களது நாட்டில் அடைக்கலம் கொடுப்பதை பாகிஸ்தான் நிறுத்தாதவரை அமைதிக்கு இங்கு இடமே இல்லை. போர் நிறுத்தம் அமலில் இருக்கிறதோ இல்லையோ நாம் பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை பிடித்திருக்க வேண்டும்" என்று ஓவைசி கூறியுள்ளார்.

அந்நிய சக்திகளை எதிர்க்கும் இந்தப் போரில் தாம் எப்போதும் அரசுக்கும் இந்திய ராணுவத்திற்கும் துணை நிற்பேன் என்று குறிப்பிட்டுள்ள ஓவைசி, இந்த நிலைப்பாடு கண்டிப்பாக தொடரும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தின் தைரியத்தையும் அவர்களுடைய திறனையும் பாராட்டுவதாக கூறியுள்ள ஓவைசி, இந்தப் போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்கள் முரளி நாயக் மற்றும் காஷ்மீர் அதிகாரி ராஜ்குமார் தப்பா மற்றும் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கும் என்னுடைய அஞ்சலியை செலுத்திக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இந்த போர் நிறுத்தம் எல்லை ஓரத்தில் வசிக்கும் மக்களுக்கு நிம்மதியை கொடுக்கும் என்று தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ள ஒவைசி, கடந்த இரண்டு வாரம் நடைபெற்ற சம்பவங்கள் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பல பாடங்களை கற்றிருக்கும் என்று கூறியுள்ளார். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும். நமக்குள் நாம் அடித்துக் கொண்டிருந்தால் அது எதிரிகளுக்கு தான் சாதகமாக அமையும் என்றும் ஓவைசி கூறியுள்ளார்.

இந்த தருணத்தில் அரசிடம் தான் சில கேள்விகளை கேட்க விரும்புவதாகவும் ஓவைசி குறிப்பிட்டுள்ளார். அதில் இந்த போர் நிறுத்தத்தை நமது நாட்டு பிரதமர் மோடி அறிவித்திருக்க வேண்டும். ஆனால் ஏன் ஒரு அந்நிய நாட்டு அதிபர் இந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார். நாம் என்றுமே மூன்றாவது ஒரு தரப்பை பேச்சு வார்த்தைக்கு அனுமதித்ததே கிடையாது.

அப்படி இருக்கும்போது நாம் ஏன் மூன்றாவது தரப்பை அனுமதித்தோம். இதனால் காஷ்மீர் விவகாரம் மீண்டும் சர்வதேச விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள மற்றவர்களை நாம் அனுமதிக்க மாட்டோம் என்று நம்புவதாக கூறியுள்ளார். இதேபோன்று இந்தியா பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையை நாம் நடுநிலையான ஒரு நாட்டில் வைத்துப் பேச ஒப்புதல் அளித்திருக்கிறோமா? அப்படி பேச்சு வார்த்தை நடத்தினால் அதில் என்ன விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

பாகிஸ்தான் தங்களது நாட்டை தீவிரவாதத்திற்கு பயன்படுத்தாது என்ற உத்திரவாதத்தை அமெரிக்காவால் கொடுக்க முடியுமா என்றும் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். இதைப் போன்று பாகிஸ்தான் மேலும் ஒரு தீவிரவாத தாக்குதலை நடத்தாது என்ற குறிக்கோளை நாம் எட்டி விட்டோமா? நமது குறிக்கோள் டிரம்ப் ஏற்படுத்திய இந்த போர் நிறுத்தமா இல்லை தீவிரவாதம் குறித்து பாகிஸ்தான் யோசிக்காத வகையில் அவர்களை வழிக்கு கொண்டு வருவதா என்று ஓவைசி கேள்வி எழுப்பி உள்ளார். இதேபோன்று பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சர்வதேச நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு அணியில் திரட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+