இந்த 3 பேரை பணி நீக்குங்க.. ஏர் இந்தியாவுக்கு மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு
அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் கடந்த 12ம் தேதி கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானத்தில் பயணித்த 241 பயணிகள் உள்பட மொத்தம் 274 பேர் இறந்தனர். இந்த விவகாரத்தில் பணியில் அலட்சியமாக இருந்த 3 அதிகாரிகளை வேலையில் இருந்து நீக்க மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் ‛ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ம் தேதி மதியம் 1:39 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட அடுத்த ஒரு நிமிடத்தில் விபத்தில் சிக்கியது.

விமான நிலையத்தின் அருகே உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர். இதில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் பலியாகி உள்ளனர். மேலும் விமானம் விழுந்த விடுதி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இருந்தவர்களும் பலியாகினர். மொத்தம் இதுவரை 274 பேர் பலியாகி உள்ளனர்.
இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பணியில் அலட்சியமாக செயல்பட்ட குற்றச்சாட்டில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் 3 அதிகாரிகளை வேலையில் இருந்து நீக்க மத்திய மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவு நேற்று பிறக்கப்பட்டுள்ளது.
அதில், ‛‛விபத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தொடர்ச்சியான விதிமீறல் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உரிமம், பணியாளர்களின் ஓய்வு தொடர்பான விதிகள் உள்பட சிஸ்டமெட்டிக் பெயிலியர்ஸ் என பல்வேறு வகைகளில் விதி மீறப்பட்டுள்ளது.
விதிமுறைகளுக்கு புறம்பாக பணியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியது தெரியவந்தது. இதனால் டிவிஷனல் துணை தலைவர் சோரா சிங், பணி ஒதுக்கீடு செய்யும் பிரிவின் தலைமை மேலாளர் பிங்கி மிட்டல், பணி ஒதுக்கீடு செய்யும் திட்டமிடல் பிரிவு அதிகாரி பாயல் அரோரா ஆகியோரை பணியில் இருந்து நீக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications