Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

150 பயணிகளுடன் லேண்ட் ஆனபோது ஏர் இந்தியா விமான டயர் வெடித்தது.. மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: 150 பயணிகளுடன் நாக்பூரில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து, தீ பிழம்பு வெளியானதால் பயணிகள் பயத்தில் அலறினர். இருப்பினும் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஏர் இந்தியாவின், ஏ320 வகை (எண்-ஏஐ630) விமானம், நாக்பூரில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு 10 மணியளவில் மும்பை விமான நிலையம் வந்து இறங்கியது.

விமானம் தரையிறங்கியதும், பயணிகள் வெளியேற ஆயத்தமாகினர். அப்போது திடீரென டமால் என்ற சத்தத்தோடு டயர்களில் ஒன்று வெடித்தது. இதனால், டயரில் இருந்து நெருப்பு பரவி விமானத்தை நோக்கி பிழம்புகளை கக்கியது.

இதை பார்த்த பயணிகள், பயத்தால் அலறினர். அதிர்வால் சில பயணிகள் லேசான அளவுக்கு காயமடைந்தனர். இருப்பினும், அவசர வழி வழியாக, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

விபத்து காரணமாக சில நிமிட நேரத்திற்கு, விமான நிலையத்தின் ரன்வே மூடப்பட்டு பிறகு திறக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+