அனைவரையும் டென்ஷனாக்கிய அஜித் பவார்.. ட்விட்டரில் கூலாக அடுத்தடுத்து நன்றி தெரிவித்து ட்வீட்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் தெறிக்கவிட்டு மகாராஷ்டிராவின் துணை முதல்வராகி இருக்கிறார் அஜித் பவார். தற்போது அவர் ட்விட்டரில் தம்மை துணை முதல்வர் என அப்டேட் செய்து கொண்டு கூலாக அடுத்தடுத்து நன்றி தெரிவிக்கும் ட்வீட்டுகளை பதிவிட்டு வருகிறார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா- காங்கிரஸ் - என்சிபி ஆகியவை இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருந்தன. ஆனால் திடீரென என்சிபியை உடைத்து அஜித் பவாரை இழுத்து பாஜக ஆட்சி அமைத்துவிட்டது.

Ajit Pawar thanks to PM Modi

முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும் துணை முதல்வராக அஜித்பவாரும் பதவியேற்றுக் கொண்டனர். இப்புதிய அரசு நவம்பர் 30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் இதற்கு எதிராக காங்கிரஸ்-என்சிபி- சிவசேனா கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இவ்வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பிக்க இருக்கிறது.

இன்னொரு பக்கம் மும்பையில் எம்.எல்.ஏக்களை தக்க வைப்பதில் சிவசேனா-காங்கிரஸ்-என்சிபி தீவிரம் காட்டுகின்றன. இப்படி எல்லா களேபரங்களுக்கும் காரண கர்த்தாவாக இருந்தவர் அஜித் பவார்.

தற்போதைய சூழ்நிலைகள் குறித்து மவுனமாக இருந்து வந்த அஜித் பவார், ட்விட்டரில் தமது கணக்கை அப்டேட் செய்துள்ளார். மகாராஷ்டிரா துணை முதல்வர் என அதில் அப்டேட் செய்திருக்கும் அஜித்பவார் பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவுகளை போட்டு வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+