For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முடிவுக்கு வந்தது அப்பா-மகன் பனிப்போர்.. மீண்டும் சமாஜ்வாதி கட்சி தலைவராகிறார் அகிலேஷ் யாதவ் !

நாளை ஆக்ராவில் நடக்க இருக்கும் சமாஜ்வாதி கட்சி பொதுக்குழு கூட்டத்த்தில் அகிலேஷ் யாதவ் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளிய

By Shyamsundar
Google Oneindia Tamil News

ஆக்ரா : சமாஜ்வாதி கட்சியின் பத்தாவது தேசிய பொதுக் குழு கூட்டம் நாளை ஆக்ராவில் அவர்கள் கட்சி அலுவலகத்தில் நடக்க இருக்கிறது. இந்த பொதுக் குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் மீண்டும் தீர்வு செய்யப்பட உள்ளார்.

நாளை நடக்கும் இந்த மாநாட்டிற்காக ராஜேந்திர சவுத்திரி உட்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆக்ராவில் கூடியுள்ளனர். நாளை அவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கடசிக்குள் இதுவரை நிலவி வந்த குழப்பங்களும், உட்கட்சி பூசலும் சரி செய்யப்படும் என முக்கிய உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Akilesh for party president post once again... big change in samajwadi !

மேலும் அகிலேஷ் யாதவ் அடுத்த ஐந்து வருடங்களுக்கு கட்சியின் தலைவராக நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த உத்திரபிரதேச மாநிலத் தேர்தலையும், வரும் நாடாளுமன்றத் தேர்தலையும் அகிலேஷ் யாதவின் தலைமையிலேயே எதிர்கொள்ள அந்தக் கட்சி முடிவு செய்து உள்ளது.

கட்சியின் மூத்த தலைவரும், அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம் சிங் யாதவ் இந்த முடிவுக்கு என்ன மாதிரியான எதிர்வினையாற்றுவார் என கடசியினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் , அவர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முலாயம் சிங், '' நான் என் மகனிடம் இருந்து பல முறை வேறுபட்டிருக்கிறேன், ஆனாலும் கட்சியின் இந்த முடிவு எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது'' என்று கூறியுள்ளார். இதன் மூலம் இருவருக்கும் இடையில் நிலவி வந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது.

English summary
Samajwadi Party once again decided to go under Akhilesh Yadav captaincy. He will be re-elected as the party’s national president on tomorrow morning. cheif member and the father of akilesh yadav, mulayam singh yadav praised him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X