குஜராத் தேர்தல் முடிவிற்கு பின் ராகுலுக்கு வந்த எஸ்எம்எஸ்... அவர் அனுப்பிய பதில் என்ன தெரியுமா?
குஜராத் தேர்தல் முடிவிற்கு பின் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அல்பேஷ் தாக்குர் முக்கியமான எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
Recommended Video

அஹமதாபாத்: குஜராத் தேர்தல் முடிவிற்கு பின் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அல்பேஷ் தாக்குர் முக்கியமான எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். இந்த எஸ்எம்எஸ்க்கு ராகுல் காந்தி உடனே பதில் அனுப்பி உள்ளார்.
அல்பேஷ் தாக்குர் மூலம் இந்த எஸ்எம்எஸ் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த விவரம் குஜராத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அல்பேஷ் தாக்குர் ராகுலுக்கு ''நாம் வென்று விட்டோம்'' என்று எஸ்எம்எஸ் செய்து இருக்கிறார். இதற்கு ராகுல் மிகவும் அழகாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அல்பேஷ் தாக்குர்
குஜராத் தேர்தலில் ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்குர் என்ற மூன்று இளம் தலைவர்களும் முக்கிய பங்கு வகித்தார்கள். இதில் ஜிக்னேஷ் மேவானி வட்காம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று இருக்கிறார். பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவராக பார்க்கப்படும் காங்கிரஸின் அல்பேஷ் தாக்குர் ரந்தன்பூர் தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார். இவர் 85,777 வாக்குகள் பெற்றார்.

குஜராத் மாநில தலைவரா?
குஜராத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அல்பேஷ் தாக்குர் பார்க்கப்படுகிறார். மேலும் இவருக்கான வாக்கு வங்கி மிகவும் அதிகமாக இருக்கிறது. அதேபோல் காங்கிரஸ் மேலிடத்திடம் இவர் மிகவும் நெருக்கமாக உள்ளார். இந்த நிலையில் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக அல்பேஷ் தாக்குர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ராகுலுக்கு எஸ்எம்எஸ்
குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியான பின் இன்று அல்பேஷ் தாக்குர் ராகுல் காந்திக்கு எஸ்எம்எஸ் ஒன்று அனுப்பி உள்ளார். அந்த எஸ்எம்எஸ்ல் ''நாம் வென்றுவிட்டோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ராகுல் காந்தி, குஜராத் மக்களுக்கு தேர்தலில் ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் அனுப்பிய பதில்
தற்போது அல்பேஷ் தாக்கூரின் எஸ்எம்எஸ்க்கு ராகுல் காந்தி பதில் அனுப்பி உள்ளார். அதில் ''ஆம் சகோதரா. காங்கிரஸ் வென்றுவிட்டது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இந்த எஸ்எம்எஸ் குறித்த செய்தி காங்கிரஸ் கட்சியினர் இடையே நேர்மறை எண்ணங்களை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications