எல்லா பக்கமும் அணைக்கட்டும் இந்தியா.. பயந்து போய் ஐஎஸ்ஐ தலைமையகத்துக்கு ஓடிய பாகிஸ்தான் பிரதமர்!
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அரண்டு போய் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைமையகத்திற்குச் சென்று ஆய்வு செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், அவசர அவசரமாக ஐஎஸ்ஐ தலைமையகத்துக்குச் சென்று அச்சுறுத்தல்களுக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்துள்ளார் அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதலடி கொடுக்கும் விதமாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது
மேலும் இரு நாடுகளும் ஏவுகணை சோதனை, எல்லையில் பாதுகாப்பு குவிப்பு உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. நாடு முழுவதும் 259 இடங்களில் இந்த ஒத்திகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நேற்று, பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) தலைமையகத்திற்குச் சென்றார். போர் பதற்றத்துக்கு மத்தியில், நாட்டின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் துணைப் பிரதமர், வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உயர் ராணுவத் தலைவர்கள் ஆகியோர் உடனிருந்தனர் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை அதிகரிப்பதன் அவசியத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வலியுறுத்தியதாகவும் தற்போதைய அச்சுறுத்தல்கள் குறித்து உயர்மட்டக் குழுவிற்கு விளக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் இந்த விசிட்டுக்கு இந்தியாவின் கடுமையான எதிர்வினைகளே காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருப்பதும், பிரதமர் மோடி, முப்படைகளுக்கு ஃப்ரீ ஹேண்ட் வழங்கி இருப்பதும் பாகிஸ்தான் பிரதமரை மிரள வைத்துள்ளது.
இதன் காரணமாகவே, அவர் ஐ.எஸ்.ஐ தலைமை அலுவலகத்துக்குச் சென்று ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. நாளை நம் நாட்டில் போர் பாதுகாப்பு ஒத்திகை, விமானப்படை பயிற்சி நடைபெறுவதற்கு மத்தியில் பாகிஸ்தானில் அச்சம் நிலவி வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications