5 ஆண்டுகளில் அமித்ஷாவின் சொத்து மதிப்பு 300% உயர்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 300% அளவுக்கு உயர்ந்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

ராஜ்யசபா தேர்தலில் குஜராத் மாநிலத்தில் அமித்ஷா வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வேட்புமனுவில் அமித்ஷாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ 34.31 கோடி குறிப்பிடப்பட்டுள்ளது.

300% வளர்ச்சி

300% வளர்ச்சி

கடந்த 2012-ம் ஆண்டு அமித்ஷாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ8.54 கோடிதான். கடந்த 5 ஆண்டுகளில் 300% அளவுக்கு அமித்ஷாவின் சொத்து மதிப்பு விஸ்வரூபமெடுத்து உயர்ந்திருக்கிறது.

ரூ19 கோடி

ரூ19 கோடி

அமித்ஷாவின் அசையும் சொத்துகள் ரூ1.90 கோடியில் இருந்து ரூ19 கோடியாக அதிகரித்துள்ளது. மூதாதையர் வழியில் ரூ10.38 அசையும் சொத்து இருப்பதாகவும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

ஸ்மிருதி இரானி

ஸ்மிருதி இரானி

அதேபோல மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் சொத்துகள் 3 இடங்களில் 80% உயர்ந்துள்ளது. 2014-ம் ஆண்டு ரூ 4.91 கோடியாக இருந்த சொத்து மதிப்பு தற்போது ரூ.8.88 கோடியாக அதிகரித்துள்ளது.

அகமது படேல்

அகமது படேல்

காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் தமக்கு ரூ6.94 கோடி சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தம் மீது எந்த ஒரு வழக்கும் நிலுவையில் இல்லை எனவும் அகமது படேல் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP President Amit Shah's assets increase from Rs 8.54 cr to Rs 34.31cr in his Rajya Sabha affidavit.
Please Wait while comments are loading...