For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூத் மேனேஜராக இருந்த வாக்குச் சாவடியில் பாஜக தலைவராக வாக்களித்த அமித்ஷா!

குஜராத்தில் பூத் மேனேஜராக இருந்த வாக்குச் சாவடியில் பாஜக தேசியத் தலைவராக அமித்ஷா இன்று வாக்களித்தார்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    தான் பூத் மேனேஜராக இருந்த வாக்குச்சாவடியிலேயே வாக்களித்த பாஜக தலைவர் அமித்ஷா- வீடியோ

    அகமதாபாத்: குஜராத்தில் பூத் மேனேஜராக இருந்த வாக்குச் சாவடியில் பாஜக தேசியத் தலைவராக அமித்ஷா இன்று வாக்களித்தார்.

    குஜராத் சட்டசபை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் இன்று வாக்களித்தனர்.

    Amit Shah Was Once Booth Manager In Area Where He Voted Today As BJP Boss

    அகமதாபாத்தின் நாராயண்புரா பகுதியில்தான் மனைவி சோனல், மகன் ஜெய்ஷா ஆகியோருடன் அமித்ஷா இன்று வாக்களித்தார். இன்று அமித்ஷா வாக்களித்த வாக்கு சாவடியில்தான் 1980களில் பாஜகவின் பூத் மேனேஜராக இருந்தார் அமித்ஷா.

    தற்போது நாராயண்புரா பகுதி நிர்வாகியாக இருப்பவர் ஜெகதீஷ் தேசாய். அமித்ஷா குறித்த பழைய நினைவுகளில் மூழ்கிய ஜெகதீஷ் தேசாய், 25 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு பூத் இன்சார்ஜாக முக்கியமான பங்களிப்பை வழங்கியவர் அமித்ஷா. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 700 வாக்குகள் இருக்கும். இந்த வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் கொண்டுவருவதில் அமித்ஷா முக்கிய பங்கு வகித்தார் என்றார்.

    வாக்களித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, குஜராத் வளர்ச்சியை எதிர்ப்பவர்களுக்கு வாக்காளர்கள் தக்க பதில் தருவார்கள் என்றார். இதன்பின்னர் குடும்பத்துடன் அமித்ஷா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

    English summary
    Bharatiya Janata Party president Amit Shah cast his vote at a polling booth in Naranpura as the voting for the second-phase of Gujarat Assembly elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X