ஜிஎஸ்டி விளம்பர தூதரானார் நடிகர் அமிதாப் பச்சன்.. 40 விநாடி வீடியோ ரெடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு இன்னும் 11 நாள்களே உள்ள நிலையில் இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல நடிகர் அமிதாப் பச்சனை விளம்பர தூதராக மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரி வாரியம் நியமித்துள்ளது.

74 வயதாகும் அமிதாப் பச்சன் ஜிஎஸ்டி குறித்த 40 விநாடி வீடியோ காட்சியில் நடித்துள்ளார். இது இப்போது அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அமிதாப் விளம்பரம் ஒளிபரப்பாகவுள்ளது.

Amitabh Bachchan Made GST Brand Ambassador By Centaral Government

ஒரு தேசம் ஒரே சந்தை என்ற நோக்கத்தை உணர்த்தும் வகையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதாக நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஜிஎஸ்டி தொடர்பான வீடியோவில் இந்த வரி விதிப்பு முறை குறித்து விளக்குகிறார் அமிதாப். மூன்று வண்ணங்களைக் கொண்ட தேசிய கொடியில் உள்ளதைப் போன்ற ஒருங்கிணைந்த தன்மை கொண்டது ஜிஎஸ்டி என்று விளக்குகிறார். அதாவது ஒரே தேசம், ஒரே வரி விதிப்பு, ஒரே சந்தை என்று அவர் கூறுகிறார்.

இதற்கு முன்பு ஜிஎஸ்டி-யின் விளம்பர தூதராக பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இருந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.

மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வரி நிர்வாகத்தில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். இதை அமல்படுத்துவதால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் அதிகரிக்கும் என மத்தியில் ஆளும் பாஜக அரசு நம்புகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bollywood megastar Amitabh Bachchan has been appointed as a brand Ambassador for Goods and Services Tax.
Please Wait while comments are loading...