"பச்சிளம் குழந்தை".. வர மறுத்த ஆம்புலன்ஸ்.. பைக் பெட்டியில் உடலை எடுத்து சென்ற தந்தை.. சோகம்!
போபால்: மத்தியப் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்த உடன் இறந்த நிலையில் அக்குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் சேவையை மருத்துவமனை வழங்க மறுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதன் காரணமாக பெற்றோர்கள் உயிரிழந்த குழந்தையை பைக்கில் உள்ள பெட்டியில் வைத்து எடுத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.

குழந்தை இறப்பு
இந்தியாவில் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு என்பது அதிக அளவில் இல்லையென்றாலும், வட மாநிலங்களில் இந்த சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. கடந்த 2020ம் ஆண்டு 1,000 குழந்தைகளுக்கு 3.9% என்கிற அளவில் இந்த இறப்பு விகிதம் இருந்தது. ஆனால் 2021ம் ஆண்டு 4.2 ஆக இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் குழந்தை ஒன்று பிறந்த உடன் உயிரிழந்துள்ளது. ஆனால் அக்குழந்தையை வீட்டிற்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டுள்ளது.

பிரசவம்
இதனையடுத்து அக்குழந்தையை அவர்கள் தங்கள் பைக்கில் வைத்தவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து உறவினர்கள் கூறியுள்ளதாவது, "தினேஷ் பாரதி எனும் நபர் பிரசவத்திற்காக தனது மனைவியை அருகில் உள்ள தனியார் கிளினிக்கில் அனுமதித்துள்ளார். அவர்கள் ரூ.5,000 கேட்டுள்ளனர். ஆனால் இவர் தன்னிடம் ரூ.3,000 மட்டுமே இருப்பதாக கூறியுள்ளார்.

ஆம்புலன்ஸ்
ஆனால் தாங்கள் கேட்ட தொகை இருந்தால் மட்டுமே பிரசவம் பார்க்கப்படும் என்று கிளினிக் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பின்னர் அடுத்த நாள் அவர் கிளினிக் கேட்ட தொகையுடன் வந்திருக்கிறார். ஆனாலும், அவரை அலைய விட்டிருக்கிறார்கள். பின்னர், சிறிது நேரத்தில் தனது குழந்தை பிறந்தவுடன் இறந்துள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது. இதை கேட்டதும் அவர் அங்கேயே உடைந்து அழுதிருக்கிறார். பின்னர் தனது குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வேண்டும் என கோரியுள்ளார்.

விசாரணை
ஆனால் கிளினிக் தரப்பில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டுள்ளது. அவர் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படவில்லை. இதனையடுத்து தனது மனைவியை அழைத்துக்கொண்டு உயிரிழந்த பச்சிளம் குழந்தையை பைக்கில் உள்ள பெட்டியில் போட்டுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து புகார் அளித்துள்ளார்." என இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பாரதியின் உறவினர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், தவறிழைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
பிரசவத்தின் போது உயிரிழந்த பச்சிளம் குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வழங்க மறுக்கப்பட்டதால் குழந்தையை பைக்கின் பெட்டியில் வைத்து எடுத்து சென்ற சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications