For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கக் கோரி க. அன்பழகன் புதிய மனு!

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனையை எதிர்க்கும் மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலர் க. அன்பழகன் கர்நாடகா உயர்நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் முன்பு புதிய மனுத்தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது பதிலளிக்க அரசுத் தரப்பு மற்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை கர்நாடகா உயர்நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் நீதிபதி குமாரசாமி விசாரித்து வருகிறார்.

Anbazhagan seeks to adjourn hearing of Jaya's appeal case

இதில் அரசுத் தரப்பில் பவானிசிங் ஆஜராகி வருகிறார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. இதில் ஏதாவது விளக்கம் தேவைப்படும் பட்சத்தில் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்றனர்.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை நீதிபதிகள் பினாகி சந்திரா கோஸ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வரும் 9-ந் தேதிக்கு ஒத்தி வைத்தது. முன்னதாக இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோக்கூர், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிப்பதற்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவுக்காக ஆஜரானவர் லலித் என்பதால் இதனை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று அன்பழகன் சார்பில் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்துவிடம் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி வழக்கை நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஸ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றுவதாக உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தாம் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நிலுவையில் இருப்பதால் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையையும் ஒத்திவைக்கக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் நீதிபதி குமாரசாமி முன்பு க. அன்பழகன் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவர் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதா மேல்முறையீடு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதுவரை சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவுக்கு ஒருவாரத்துக்குள் அரசு தரப்பு மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோர் தரப்பு வழக்கறிஞர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.

English summary
DMK general secretary K. Anbazhagan has filed a new plea seeking to adjourn the hearing the former Tamil Nadu Chief Minister Jayalalithaa's appeal in DA case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X