பொதுப் பணி- செங்கோட்டையன்! மின்சாரம்- நிர்மல் குமார், நகராட்சி- ஆனந்த்! தவெகவின் உத்தேச அமைச்சரவை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் முதல்வராக காலை 10 மணிக்கு பதவியேற்கும் போது அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள். அவர்கள் யார் என்பதை பார்க்கலாம். விஜய்யின் உத்தேச அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு 120 இடங்கள் பெரும்பான்மை கிடைத்துள்ள நிலையில் அந்த கடிதங்களுடன் விஜய், ஆளுநர் ஆர்லேகரை 4-வது முறையாக சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

vijay

இதையடுத்து ஆளுநருடன் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் விஜய் ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது நாளை பதவியேற்க விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து நாளை காலை 10 மணிக்கு அவருக்கான பதவியேற்பு விழா , சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும்.

நாளை நவமி திதியாக இருந்தாலும் சுபஓரையான சந்திர ஓரையில் முதல்வராக விஜய் பதவியேற்கிறார். அவருடன் சேர்த்து 9 பேரும் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள்.

அந்தச 9 பேரும் தவெகவினர்தான். அவர்களில் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன், சத்தியபாமா, ஜேசிடி பிரபாகர், வெங்கட்ரமணன் ஆகிய 9 பேர் பதவியேற்பார்கள் என தெரிகிறது.

பிராமண சமூகத்தை சேர்ந்த வெங்கட்ரமணனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கிறது. அது போல் நிறைய பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் அமைச்சரவை விரிவாக்கப்படும். இன்றைய தினமே அமைச்சரவை பட்டியலை விஜய், ஆளுநரிடம் கொடுத்திருப்பார் என சொல்லப்படுகிறது. வி.எஸ்.பாபு அல்லது லோகேஷ் தமிழ்ச் செல்வன் சபாநாயகராக்கப்படலாம் என்கிறார்கள்.

காரைக்குடி பிரபு, அறந்தாங்கி பர்வேஸ், மதுரை கல்லானை, ஈரோடு பாலாஜி, சேலம் பார்த்திபன், தாகிரா, விஜயலட்சுமி, தஞ்சை சரவணன், மரிய வில்சன் ஆகியோரும் அமைச்சர்களாக வாய்ப்புள்ளது. அது போல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் அல்லது இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக ஆளுநருடன் விஜய் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த சந்திப்பின் போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த செல்வப்பெருந்தகை, பெ சண்முகம் உள்ளிட்டோரும் விஜய்யுடன் வந்திருந்தனர்.

பெரும்பான்மையை காட்டியுள்ளதால் இன்று இரவே விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆட்சி அமைக்க அழைப்பதற்கான கடிதம் ஆளுநர் மாளிகையில் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் ஆட்சி அமைக்க எந்த சிக்கலும் இல்லை என்ற பட்சத்தில் இந்த அழைப்பு கடிதத்தை எந்த நேரத்திலும் ஆளுநர் அலுவலகம் வெளியிடும் என தெரிகிறது.

நாளை விஜய் முதல்வராக பதவியேற்பதால் நாடு முழுக்க மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இதனால் பட்டாசு வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. அது போல் ஸ்வீட் கடைகளிலும் வியாபாரம் ஓஹோ என நடைபெறுகிறது.

தவெக அமைச்சரவையின் உத்தேச பட்டியல்:

விஜய்- முதல்வர், பொது நிர்வாகம், காவல், உள்துறை

செங்கோட்டையன்- பொதுப் பணித் துறை

புஸ்ஸி ஆனந்த்- நகராட்சி நிர்வாகத் துறை

நிர்மல்குமார்- மின்சாரத் துறை

ஆதவ் அர்ஜுனா- விளையாட்டு மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை

நிர்மல்குமார்- மின்சாரம்

ஆதவ் அர்ஜுனா- விளையாட்டு மற்றும் மதுவிலக்குத் துறை

ஆதிதிராவிட நலத் துறை- ராஜ்மோகன்

முஸ்தபா- சிறுபான்மை நலத் துறை

பள்ளி கல்வித் துறை- வெங்கட்ரமணன்

அருண்ராஜ்- பத்திரப்பதிவு மற்றும் வணிகத் துறை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+