சிறகடிக்க ஆசை: ஸ்ருதி அம்மா செய்த சம்பவம்! கதறி அழுத விஜயா.. இது தேவை தான்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வார எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஸ்ருதியின் அப்பாவும் அம்மாவும் செய்த செயலை பார்த்து விஜயா கதறி அழுது கொண்டிருக்கிறார். ஏற்கனவே விஜய்யாவிற்க்கு எங்கேயும் போக வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது புது பிரச்சனை வந்து இருக்கிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து கடன் வாங்கியதால் பைனான்சியர் வீட்டை ஜப்தி செய்வதற்காக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். குடும்பத்திற்கு தெரியாமல் விஜயாவும் மனோஜும் அண்ணாமலையின் கையெழுத்தை போட்டு பைனான்சியரிடம் கடன் வாங்கி இருந்தனர். இது சிந்தாமணியின் பிளானாக இருந்தாலும் அதில் விஜயா வசமாக சிக்கிக்கொண்டார்.
இப்போது மீனா பூ வியாபாரிகள் சங்கத் தேர்தலில் ஜெயித்து விட்டதால் கடுப்பான சிந்தாமணி மீனாவை பழி வாங்குவதற்காக விஜயா வீட்டை வைத்து கேம் விளையாடுகிறார். 46 லட்சம் பணத்தை எனக்கு உடனே தர வேண்டும் என்று பைனான்சியர் மிரட்டி இருந்தார். அப்போது முத்து அவரிடம் மூன்று மாதம் டைம் கேட்டு இருந்தார். அதற்கு அவரும் ஒரு மாதம் என்றால் ஓகே சொல்லி இருந்தார். ஆனால் கடைசியில் சிந்தாமணி கொடுத்த பிரஷரால் ஒரே நாளில் பணத்தை கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
வீட்டிற்கு சீல்
பணத்தை ஒரே நாளில் கட்டாததால் வீடு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அண்ணாமலை மீனாவின் வீட்டிற்கு போய் இருக்கிறார். விஜயா நான் மீனா வீட்டிற்கு வரவே மாட்டேன் என்று திமிராக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ஸ்ருதி எங்க வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட்டதும், அங்கு எல்லா வசதியும் இருக்கு என்று போய்விட்டார். ஆனால் அங்கு போன பிறகுதான் விஜயாக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது.
ஸ்ருதி வீட்டில் பிளாக் டீ மற்றும் சாப்பாடு எல்லாமே வித்தியாசமாக இருப்பதால் விஜயாவால் இருக்க முடியாமல் பார்வதிக்கு போன் செய்து நான் உன் வீட்டுக்கு வரேன் என்று சொல்லி இருந்தார். ஆனால் பார்வதியோ வந்தால் உன் புருஷனோட என் வீட்டுக்கு வா இல்லன்னா உன் புருஷன் இருக்கிற இடத்தில போய் உக்காரு என்று சொல்லிவிட்டார். இதனால் விஜயாவிற்கு போக இடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

கதறி அழுத விஜயா
ஏற்கனவே ஸ்ருதி அப்பாவும் அம்மாவும் வெளியே போகும்போது ரூம் கதவை பூட்டிவிட்டு விட்டு சென்றதை பார்த்து விஜயா கடுப்பில் இருக்கிறார். இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஸ்ருதி வீட்டில் பார்ட்டி நடக்கிறது. அதில் ஸ்ருதியின் அப்பா பாட விஜயாவை ஆட சொல்லி எல்லோரும் கிண்டல் பண்ணுகின்றனர். அதனால் விஜயா கடுப்பாகி தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
இனி நடக்கப் போகும் சம்பவம்
இதுவரைக்கும் தன்னுடைய வீட்டில் தான் தான் ராணி என்பதுபோல அராஜகம் பண்ணிக் கொண்டிருந்த விஜயாவிற்கு இப்போ அடுத்தடுத்து பிரச்சனைகளும் அவமானங்களும் வர அழுது கொண்டிருக்கிறார். ஏற்கனவே விஜயா அந்த வீட்டில் எப்படி இருக்கிறாரோ என்று முத்து ஃபீல் பண்ணி கொண்டு இருந்த நிலையில் இனி முத்து தான் விஜயாவை மீனா வீட்டுக்கு கூட்டிட்டு போவார் என்று தெரிகிறது. அங்கே போன பிறகு தன்னுடைய நிலைமையை அறிந்து திமிரு பண்ணாமல் இருக்க போகிறாரா? அல்லது மீண்டும் அது குறை இது குறை என்று குற்றம் சொல்லப் போகிறாரா? என்று பார்ப்போம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications