Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெலுங்கானா தந்த பாடம்! ஆந்திராவில் ஜெகன் அதிரடி முடிவு! 50 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு நோ சீட்!

Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டினம்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு அனைவரது பார்வையும் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆந்திரா தேர்தல் பக்கம் திரும்பி உள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் மொத்தம் 175 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 88 இடங்கள். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.

Andhra Assembly Election 2024: CM Jagan likely to deny tickets to 50 MLAs?

ஆந்திரா தேர்தல் களத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், காங்கிரஸ், பாஜக, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா, இடதுசாரி கட்சிகள், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை முதன்மையான கட்சிகளாக உள்ளன.

2019 தேர்தல் முடிவுகள்: 2019-ம் ஆண்டு தேர்தலில் 175 தொகுதிகளில் போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 151 இடங்களில் அமோக வெற்றியை அறுவடை செய்தது. 2014-ம் ஆண்டு தேர்தலில் வெறும் 67 இடங்களில்தான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வென்றிருந்தது. முந்தைய தேர்தலைவிட 2019-ல் 84 இடங்கள் கூடுதலாக பெற்று அனைவரையும் திகைக்க வைத்தார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. பிரதான எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சி வெறும் 23 இடங்களில்தான் வென்றது. 2014-ம் ஆண்டு 102 இடங்களைப் பெற்றிருந்தது தெலுங்குதேசம். முந்தைய தேர்தலில் வென்ற 79 இடங்களை இழந்தது தெலுங்குதேசம்.

2019-ல் கட்சிகளின் வாக்குகள்: 2019-ம் ஆண்டு தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 49.95% வாக்குகளைப் பெற்றது. தெலுங்குதேசம் கட்சி 39.17% வாக்குகளைப் பெற்றிருந்தது. 5.53% வாக்குகளைப் பெற்ற ஜனசேனாவுக்கு ஒரு இடம் கிடைத்தது. இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி 174 தொகுதிகளில் போட்டியிட்டு 1.17% வாக்குகளைத்தான் பெற்றது. 173 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவுக்கு வெறு 0.84% ஓட்டுகள்தான் தேறியது. 2014 தேர்தலில் 4 இடங்களில் பாஜக வென்றிருந்தது. ஆந்திராவில் 2019 தேர்தலில் நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுகள் 1.28%. சிபிஎம் கட்சிக்கு 0.32%, சிபிஐ கட்சிக்கு 0.11, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 0.28% வாக்குகள் கிடைத்தன. 2019 தேர்தலில் மொத்தம் 80.39% வாக்குகள் பதிவாகி இருந்தன.

ஆந்திரா கூட்டணிகள்: ஆந்திரா தேர்தலில் தெலுங்குதேசம் கட்சியும் ஜனசேனாவும் கூட்டணி அமைத்துள்ளன. ஜனசேனா, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இதனால் தெலுங்குதேசம், பாஜக, ஜனசேனா கூட்டணி அமையக் கூடிய சாத்தியம் உள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வழக்கம் போல் தனி ஆவர்த்தனம் செய்யும். இடதுசாரிகள், காங்கிரஸ் இணைந்து "இந்தியா" கூட்டணியாக களம் காணுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

தெலுங்கானா தோல்வி: இந்த நிலையில் தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி மிகப் பெரும் தோல்வியைத் தழுவி இருப்பது ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை உஷார்படுத்தி இருக்கிறது என்கின்றன தகவல்கள். தெலுங்கானாவில் மூத்த அமைச்சர்கள், சரியாக செயல்படாத எம்.எல்.ஏக்களுக்கு சீட் தரவே கூடாது என முதல்வராக இருந்த சந்திரசேக ராவ் மகன், கே.டி. ராமாராவ் வலியுறுத்தி இருந்தார். ஆனால் அவரது எதிர்ப்பை மீறி சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கும் சீட் கொடுத்தார் கேசிஆர். இதனாலேயே தெலுங்கானாவில் பெரும் தோல்வியை பிஆர்எஸ் சந்தித்தது.

50 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட் இல்லை: தற்போது தெலுங்கானா தேர்தல் முடிவுகளை வைத்து ஆந்திராவில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் 50 பேருக்கு சீட் தருவதில்லை என முடிவெடுத்துள்ளாராம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. தொடக்கத்தில் 25 முதல் 35 எம்.எல்.ஏக்களுக்குதான் சீட் இல்லை என முடிவெடுத்தாராம் ஜெகன். தற்போது தெலுங்கானா தேர்தல் முடிவுக்குப் பின்னர் 50 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட் தர வேண்டாம் என முடிவெடுத்துவிட்டாராம் ஜெகன் மோகன் ரெட்டி. அதேபோல லோக்சபா எம்.பி.க்கள் சிலரையும் சட்டசபை தேர்தலில் களமிறக்க திட்டமிட்டுள்ளாராம் ஜெகன். ஆந்திராவில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி இப்போதே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் என்கின்றன ஆந்திரா தகவல்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+