ரஜினியின் "குரைக்காத நாயும் இல்லை" டயலாக்- ஜெகன் கட்சியில் வெடித்த உட்கட்சி பூசலில் "ஆயுத"மானது!
விஜயவாடா: ரஜினிகாந்த் குறிப்பிட்ட "குரைக்காத நாயும் இல்லை.. குறை சொல்லாத வாயும்" இல்லை என்ற வசனம் தற்போது ஆந்திரா அரசியல் பேசுபொருளாகி இருக்கிறது.
ஆந்திரா மாநில சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுடன் நடைபெற உள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ், தெலுங்குதேசம், பாஜக, பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் இடதுசாரிகள் களத்தில் உள்ளன.

ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்க படுவேகமாக செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்புகள், லோக்சபா தேர்தலிலும் சட்டசபை தேர்தலிலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு களம் சாதகமாக இருப்பதாக கூறுகின்றன.
அதேநேரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் உட்கட்சி பூசலும் தலையெடுக்கத் தொடங்கி இருக்கிறது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் புலிவெந்துல, சந்திரபாபு நாயுடுவின் குப்பம் ஆகிய தொகுதிகளைத் தவிர பெரும்பாலான தொகுதிகளில் ஒவ்வொரு கட்சியிலும் உட்கட்சிப் பூசல் உச்சகட்டமாக தலைவிரித்தாடுகிறது. சரி இதில் ரஜினிகாந்த் எங்கே வந்தார்? என்கிறீர்களா?
மயிலாவரம் தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வசந்த கிருஷ்ண பிரசாத். ஆனால் இத்தொகுதியில் போட்டியிடுவதற்கு வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜோகி ரமேஷ் முயற்சித்து வருகிறாராம். இதனால் மயிலாவரம் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முட்டல் மோதல் வெடித்திருக்கிறது. வசந்த கிருஷ்ண பிரசாத், ஜோகி ரமேஷ் இருவரும் பகிரங்கமாகவே கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரடியாகவே தலையிட்டு இருவரையும் எச்சரித்தும் இருக்கிறார்.
இதனிடையே மயிலாவரம் தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய எம்.எல்.ஏ. வசந்த கிருஷ்ண பிரசாத், ஆந்திராவில் ஊழல் செய்யாத எம்.எல்.ஏக்களில் நானும் ஒருவன். 2024 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் அரசியலில் தொடருவேன். இல்லை எனில் என்னுடைய தொழிலை பார்க்க கிளம்பிவிடுவேன். நடிகர் ரஜினிகாந்த் சொல்வதைப் போல, குரைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. எனக்கு எந்த ஜாதி முத்திரையோ எதுவும் இல்லை. ஆனால் என் மீது எல்லா முத்திரையும் குத்திப் பார்க்கின்றனர். எனக்கு என தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி வைத்திருக்கிறேன். அரசியலில் இல்லாமல் போனால் அதனை கவனித்துக் கொள்ளப் போகிறேன். எனக்கு எதிராக சதி செய்பவர்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நன்கு அறிவார் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications