ஆந்திரா தேர்தல்: பாஜகவுடன் கூட்டணி வைக்கும் போட்டியில் வெல்லப் போவது சந்திரபாபு நாயுடு? ஜெகன் அண்ணா?
அமராவது: ஆந்திரா சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியும் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் முட்டி மோதுவது பரபரப்பான காட்சிகளாக உருவெடுத்துள்ளன.
ஆந்திரா மாநில சட்டசபைக்கு லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சியின் தலைவரான முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறார்.

ஜெகன் மோகனுக்கு எதிரான முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஜனசேனாவோ பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த நிலையில் சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போவது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸா? தெலுங்குதேசம் கட்சியா? என்பதுதான் ஆந்திராவின் தற்போதைய விவாதம். இந்த மாதத்தின் தொடக்கத்தில் திடீரென டெல்லி சென்றார் சந்திரபாபு நாயுடு. டெல்லியில் அமித்ஷா மற்றும் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்தார். உடனே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்குதேசம் இணைகிறது என்கிற தகவல் காட்டுத் தீயாக பரவியது.
ஆனால் இந்த சந்திப்புக்கு மறுநாளே டெல்லி போனார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஏற்கனவே மத்திய பாஜக அரசுக்கு நாடாளுமன்றத்தில் பல வகைகளிலும் ஆதரவு தருகிறவர்; எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பக்கமே தலை வைத்து படுக்காதவர். அதனால் ஜெகன் மோகனின் இந்த சந்திப்பும் ஓஹோ, பாஜகவுடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வைக்கப் போகிறதா? என்கிற இன்னொரு செய்தியை உருவாக்கிவிட்டன.
அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியோ, ஆந்திரா மாநில தலைவராக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளாவை நியமித்துவிட கூடுதல் பரபரப்பாகிவிட்டது ஆந்திரா தேர்தல் களம். அண்ணன் ஜெகன் மோகனுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு சூறாவளியாக ஒய்.எஸ்.ஷர்மிளா சுழன்று கொண்டிருக்கிறார்.
டெல்லி சந்திப்புகளைத் தொடர்ந்து ஆந்திராவின் இரு பெரும் கட்சிகளுமே வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. டெல்லியின் முடிவு அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கத்தான் இந்த காத்திருப்பாம். யாருக்கு திறக்க காத்திருக்கிறதோ டெல்லி கதவுகள்?
-
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications