தெறிக்கவிட்ட சந்திரபாபு நாயுடு தேர்தல் அறிக்கை! காப்பி அடித்து களமிறக்கியதாக முதல்வர் ஜெகன் சீற்றம்!
கர்நூல்: ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட தேர்தல் அறிக்கையால் அம்மாநில அரசியல் களம் அக்னி வெயிலைப் போல கனன்று கொண்டிருக்கிறது.
ஆந்திரா மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தில் மொத்தம் 175 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 88 இடங்கள்.
ஆந்திராவைப் பொறுத்தவரை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் இடையேதான் கடும் போட்டி. காங்கிரஸ், பாஜக, பவண் கல்யாணின் ஜனசேனா, கேசிஆரின் பி.ஆர்.எஸ் மற்றும் இடதுசாரிகளும் ஆந்திரா தேர்தல் களத்தில் உள்ளன.

ஆந்திரா தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் நிலையில் அம்மாநில அரசியலில் பெரும் புயலை வீச செய்துள்ளார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்திரபாபு, ஆந்திரா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 நிதி உதவி; இளம் பெண்களுக்கு மாதம் ரூ1,500; அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.3,000 நிதி உதவி என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன. அத்துடன் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு தேர்தல் அறிக்கையின் 2-ம் பாகமும் விரைவில் வெளியிடப்படும் என கூறியிருந்தார் சந்திரபாபு நாயுடு.
சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் அறிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், சந்திரபாபு நாயுடு வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஆந்திராவில் தயாரானது அல்ல. அந்த அறிக்கை ஒரு கலவை சாதம். கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக வெளியிட்ட வாக்குறுதிகளை காப்பி அடித்து தயாரிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநில சட்டசபை தேர்தலானது யுத்த களமாக இருக்கும். பொதுமக்களுக்கு நிதி உதவியை வங்கி கணக்கில் செலுத்துகிற அரசு வேண்டுமா? அரசு பணத்தை சூறையாடுகிறவர்கள் வேண்டுமா? என்பதை ஆந்திரா மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications