வானத்தில் ஓட்டை விழுந்ததோ? அலறும் ஆந்திரா.. அடுத்த வேளை உணவுக்கு தவிக்கும் மக்கள்! முதல்வர் ஆய்வு
அமராவதி: தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானா தற்போது மிகப் பெரிய அளவிலான இயற்கை பேரிடரை சந்தித்திருக்கிறது. விடாமல் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக வீடுகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் அடுத்த வேளை உணவுக்கு கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றனர் ஆந்திர மக்கள். இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரப்பர் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார்..
இந்த ஆண்டு தென்னிந்தியா சந்தித்த மிகப்பெரிய இயற்கை பேரிடர் என்றால் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வயநாடு நிலச் சரிவைச் சொல்லலாம்.. அதற்கு அடுத்ததாக மிகப்பெரிய பாதிப்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பார்க்கப்படுகிறது.

அந்த மாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆந்திராவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வானத்தில் ஓட்டை விழுந்தது போல கனமழை வெளுத்து வாங்கியது. தொடர் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் மூழ்கியுள்ளன.
குறிப்பாக ஆந்திராவில் விஜயவாடா இருந்த சுவடு தெரியாமல் வெள்ளத்தில் மூழ்கி தவிக்கிறது. வீடுகள், கார்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் நிலையில் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல், கழுத்தளவு நீரில் மக்கள் பலரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களை தேடி வருகின்றனர். வெள்ளம் காரணமாக ரயில், விமானம், பேருந்து சேவைகள் முற்றிலும் முடங்கி இருக்கிறது.
இதனால் சாலையிலேயே பலர் தஞ்சம் புகுந்து இருக்கின்றனர். கார்கள் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் வெளியில் நடமாட முடியவில்லை. பெட்ரோல் நிலையம், கேஸ் ஸ்டேசன்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கும் நிலையில் எரிபொருள் கிடைக்காமல் மக்கள் அல்லாடுகின்றனர். குறிப்பாக என்டிஆர் மாவட்டத்தில் பல பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் கிராம மக்கள் அங்கே சிக்கி இருக்கின்றனர். சில இடங்களில் கயிறு கட்டி மக்களை மீட்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
கனமழையால் மூழ்கி இருக்கும் ஆந்திராவில் ரயில் சேவையும் முற்றிலும் முடங்கி இருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஆந்திரா வழியாக செல்லும் ரயில்களின் சேவை வேறு மார்க்கங்களில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில மீட்பு குழுவினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து மக்களை மீட்டு வருகின்றனர்.
மேலும் ஆங்காங்கே நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு இருக்கின்றனர். அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ சேவை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் பல இடங்களில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க தேசிய மீட்பு படையினர் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். மீட்ப பணிகளில் ராணுவமும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரப்பர் படகில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். இடுப்பளவு தண்ணீரில் மீட்பு படையிர் படகை இழுத்துச் செல்ல அதில் அமர்ந்தவாறு சந்திரபாபு நாயுடு, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். இதனையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் அவர், தொடர்ந்து நிவாரண உதவி கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
ஆந்திராவில் மட்டும் இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளம் காரணமாக பலியாகி இருக்கும் நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்திருக்கின்றனர். தொடர்ந்து வெள்ளத்தால் சிக்கித் தவிக்கும் மக்களை அவர்கள் மீட்டு வருகின்றனர். ஆந்திரா மட்டுமல்லாது தெலுங்கானாவிலும் கன மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக கம்மம், சூர்யாபேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications