மக்கள் தொகை ஊக்குவிப்பு.. சீரியசாக இறங்கும் ஆந்திரா.. ஆளும் கட்சி எம்பி அறிவித்த சலுகையை பாருங்க

Subscribe to Oneindia Tamil

விஜயவாடா: மக்கள் தொகை கூடுவது நல்ல விஷயம் தான் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி வரும் நிலையில், மகப்பேறு விடுப்பு தொடர்பாக சில சலுகைகளை அறிவித்துள்ளார். அதேபோல அவரது கட்சியின் விஜயநகரம் எம்பியான கலிசெட்டி அப்பலா, மூன்றாவது பெண் குழந்தை பெற்றால் ரூ.50 ஆயிரமும் ஆண் குழந்தை என்றால் பசு மாடும் பரிசாக அளிப்பேன் என அறிவித்துள்ளார்.

மக்கள் தொகை வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசி வருகிறார். அண்மைக்காலமாகவே மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாக மிகவும் தீவிரமாக பேசி வரும் சந்திரபாபு நாயுடு, மக்கள் தொகையை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பேசி வருகிறார்.

Population Andhra Pradesh Child

மக்கள் தொகையை அதிகரிக்க விருப்பம்

அண்மையில் டெல்லியில் பேட்டி அளித்த சந்திரபாபு நாயுடு கூறுகையில், "உலகில் உள்ள பல நாடுகள் வயதான மக்கள்தொகையுடன் போராடி வருகின்றன. தென் மாநிலங்களும் மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் நான், தற்போது நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறேன். அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

மக்கள்தொகை அதிகமாக இருப்பது நல்லதுதான். வயதான மக்கள் தொகை ஒரு பிரச்சனை. ஐரோப்பா, ஜப்பான் மற்றும் சீனாவில் வயதான பிரச்சனை உள்ளது. வட இந்தியா, பீகார் மற்றும் உ.பி.யில் மக்கள் தொகை ஒரு பிரச்சனையாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் அது வரவேற்கத்தக்க அறிகுறி. மக்கள் தொகை பெருக்கம் முக்கியம். நமக்குத் தேவையானது மக்கள்தொகை மேலாண்மை தான்" என்று பேசியிருந்தார்.

மூன்றாவது குழந்தை பெற்றால் 50 ஆயிரம் பரிசு

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஆதரவாக சந்திரபாபு நாயுடு பேசிய நிலையில் அவரது கட்சியை சேர்ந்த எம்பி கலிசெட்டி அப்பலா, "மூன்றாவது குழந்தை பெற்றால் பரிசுத்தொகை வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: மூன்றாவதாக பெண் குழந்தை பெற்றால் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும். ஆண் குழந்தையாக இருந்தால் பசு மாடு பரிசாக கொடுப்பேன். எனது எம்பி ஊதியத்தில் இருந்து இந்த ஊக்கத்தொகையை அறிவிப்பேன்" என்றார்.

ஆந்திர எம்பியின் இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்தவர்கள், எம்பியின் இந்த பேச்சு அடங்கிய வீடியோவை சமூக வலைத்தலங்களில் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். விஜயநகரம் எம்பியான கலிசெட்டி அப்பலலா மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளர்.

பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு

முன்னதாக கடந்த சனிக்கிழமை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். சந்திரபாபு நாயுடு பேசுகையில், "பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு பேறு காலத்தில் வழங்கப்படும். எத்தனையாவது குழந்தை என்பதை கணக்கில் கொள்ளாமல் இந்த விடுப்பு வழங்கப்படும்" என்றார். தற்போது வரை இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் வரை மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். அதன்பிறகு வழங்கப்படாத நிலை இருந்த நிலையில் புதிய அறிவிப்பை சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+