சடலத்துடன் நடந்து சென்றவரை மறித்த போலீஸ்.. அடுத்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! ச்சே என்னா மனுஷன்யா!
விசாரணையில் போலீசுக்கு ஒடியா மொழி தெரிந்திருக்கவில்லை, பிணத்தை ஏந்திக்கொண்டு நடந்தவருக்கு ஆந்திரா மொழி தெரியாததால் குழப்பம் ஏற்பட்டது.
புவனேஸ்வர்: ஆம்புலன்ஸ் வைத்து தனது மனைவியின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாமல் சடலத்தை தோளில் சுமந்து நடந்து சென்ற நபருக்கு காவல்துறையினர் உதவி செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்தவர் சாமுலு பாங்கி(35). இவர் ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள போட்டாங்கி கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த கிராமம் ஆந்திர பிரதேச எல்லையையொட்டியுள்ள ஒரு மலை கிராமமாகும். பெரிய அளவில் போக்குவரத்து, மருத்துவமனை, கல்வி நிலையங்கள் போன்ற வசதிகள் இங்கு கிடையாது. எனவே இங்குள்ள மக்கள் ஆந்திர பிரதேசத்தைதான் அதிகம் நம்பியுள்ளனர்.
குறிப்பாக மருத்துவமனைக்கு ஆந்திராவுக்குதான் வரவேண்டும். இங்கிருந்து ஆந்திர மாநிலம் சுமார் 30-40 கி.மீ இருக்கும். இப்படி இருக்கையில், பாங்கியின் மனைவி குருவுக்கு(30) சில நாட்களுக்கு முன்னர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அருகில் இருந்த மருந்து கடைகளில் சில மருந்துகளை பாங்கி வாங்கி கொடுத்திருக்கிறார். ஆனாலும் குருவின் உடல் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வாந்தி, மயக்கம், தீவிர காய்ச்சல் ஆகியவை இக்குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக பாதித்திருக்கிறது.

மனைவியின் மரணம்
குருவை பார்த்துக்கொள்ள பாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்திருக்கிறார். எனவே வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. அருகில் இருந்த சில தனியார் கிளினிக்கில் மனைவி குருவை அழைத்து சென்ற பரிசோதித்தபோது, "பெரிய ஆஸ்பதிரிக்கு போக வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து ஆட்டோ ஒன்றை பேசிக்கொண்டு தனது மனைவியை அதில் ஏற்றி ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். குருவை பரிசோதித்த மருத்துவர்கள் நிலைமை மோசமாக இருப்பதாகவும், காப்பாற்றுவது கடினம் என்றும் கூறியுள்ளனர். எனவே மருத்துவமனையில் வைத்திருப்பதை விட வீட்டிற்கு கொண்டு சென்றுவிடுங்கள் என்று கூறியுள்ளனர்.

உயிரிழப்பு
இதனை எதிர்பார்க்காத பாங்கி மனமுடைந்துள்ளார். பின்னர் அதே ஆட்டோவில் மனைவியை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டிருக்கிறார். ஆனால் ஆட்டோ இரண்டு கிலோமீட்டர் பயணித்த நிலையில் மனைவி குரு மயங்கியுள்ளார். ஆட்டோவை ஒரு பெட்டிக்கடையின் அருகே ஓரம் கட்டி தண்ணீர் தெளித்து மனைவியை எழுப்ப முயன்றுள்ளார் பாங்கி. ஆனால் என்ன செய்தும் மனைவி கண் விழிக்கவில்லை. உடலின் வெப்பநிலை குறைந்து கால்கள் விரைக்க தொடங்கியுள்ளன. இதனை கண்ட ஆட்டோ ஓட்டுநர் குரு இறந்துவிட்டதை உறுதி செய்துக்கொண்டு உடனடியாக உடலை ஆட்டோவிலிருந்து கீழே இறக்கி வைத்திருக்கிறார்.

ஆட்டோ
பின்னர் அங்கிருந்து எதுவும் சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டு சென்றுள்ளார். ஆட்டோ புழுதியை கிளப்பி சென்ற பாதை பார்த்துக்கொண்டிருந்த பாங்கிக்கு எதுவும் புரியவில்லை. குருவின் உடலை தொட்டு பார்த்த அவருக்கு அதன் பின்னர்தான் குரு இறந்துவிட்டது தெரியவந்திருக்கிறது. இந்த பகுதி ஆந்திரா-ஒடிசா எல்லையென்பதால் ஆள் நடமாட்டமோ, கடைகளோ அதிக அளவில் இருக்காது. எனவே எங்கு சென்று யாரிடம் உதவி கேட்பது என தெரியாமல் பாங்கி விழித்துக்கொண்டிருக்கையில் பெட்டிக்கடையில் நின்றுக்கொண்டிருந்தவர்கள் நிலைமையை உணர்ந்து பரிதாபமாக பாங்கியை பார்த்துக்கொண்டிருந்தனர். தனது கடைசி நம்பிக்கையும் தன்னை விட்டு போய்விட்டதை உணர்ந்த பாங்கி மனைவியை தோளில் தூக்கிக்கொண்டு அங்கிருந்து நடக்க தொடங்கினார். பின்னர் அங்கிருந்து எதுவும் சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டு சென்றுள்ளார். ஆட்டோ புழுதியை கிளப்பி சென்ற பாதை பார்த்துக்கொண்டிருந்த பாங்கிக்கு எதுவும் புரியவில்லை. குருவின் உடலை தொட்டு பார்த்த அவருக்கு அதன் பின்னர்தான் குரு இறந்துவிட்டது தெரியவந்திருக்கிறது. இந்த பகுதி ஆந்திரா-ஒடிசா எல்லையென்பதால் ஆள் நடமாட்டமோ, கடைகளோ அதிக அளவில் இருக்காது. எனவே எங்கு சென்று யாரிடம் உதவி கேட்பது என தெரியாமல் பாங்கி விழித்துக்கொண்டிருக்கையில் பெட்டிக்கடையில் நின்றுக்கொண்டிருந்தவர்கள் நிலைமையை உணர்ந்து பரிதாபமாக பாங்கியை பார்த்துக்கொண்டிருந்தனர். தனது கடைசி நம்பிக்கையும் தன்னை விட்டு போய்விட்டதை உணர்ந்த பாங்கி மனைவியை தோளில் தூக்கிக்கொண்டு அங்கிருந்து நடக்க தொடங்கினார்.

ஆம்புலன்ஸ்
சுமார் 3 கி.மீ இப்படியே நடந்த நிலையில், சில காவலர்கள் ஜீப்பில் வந்து இவரை மறித்து விசாரித்துள்ளனர். ஆனால் இவருக்கு தெலுங்கு தெரியாது, அதேபோல காவல்துறையினருக்கு ஒடியா மொழி தெரியாது. எனவே காவலர்கள் குழப்பியுள்ளனர். பின்னர் அந்த வழியாக வந்த ஒருவர் காவல்துறையினருக்கு விளக்கி கூறியுள்ளார். பாங்கியின் பரிதாபமான நிலைமையை உணர்ந்த காவல்துறையினர் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் குருவின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி பாங்கியை அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில்,

பாராட்டு
"ஆந்திர எல்லையையொட்டிய பகுதியில் யாரோ ஒருவர் பிணத்தை தோளில் சுமந்து சாலையில் நடந்துச் சென்றுக்கொண்டிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே நாங்கள் பாங்கியை தேடி வந்தோம். மொழி பிரச்னை காரணமாக விசாரணையில் எதையும் எங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. பின்னர் அவ்வழியாக சென்ற நபர் எங்களுக்கு விளக்கி கூறினார். இதனையடுத்து நாங்கள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்து எங்களால் முடிந்த உதவியை செய்தோம்" என்று கூறியுள்ளனர். காவல்துறையினரின் இந்த செயலுக்கு அவ்வூர் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications