கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்தியது ஆந்திர அரசு.. விவசாயிகள் மகிழ்ச்சி
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தற்காலிகமாக ஆந்திர அரசு நிறுத்தியுள்ளது. தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஆந்திர அரசு இந்த முடிவெடுத்துள்ளது.
சித்தூர்: கொசஸ்தலை ஆற்றின் கிளை ஆறான லங்கா ஆற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டும் பணியை தொடங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தூர் சீதலகுப்பத்தில் விவசாயிகள் கடுமையாக போராட்டத்தை நடத்தினார்கள்.

இதனையடுத்து, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் மூலம் வலியுறுத்தினார்.
மேலும், தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிந்தபின் அணைக்கட்டும் பணியை ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கொசஸ்தலை ஆற்றின் கிளை கால்வாயில் தடுப்பணை கட்டுவதை ஆந்திர அரசு இன்று நிறுத்தியுள்ளது. இதனை தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை தமிழக மற்றும் ஆந்திர அரசு அதிகாரிகள் இடையே நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு தடுப்பணை கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications