For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சகிப்புத்தன்மை விவகாரம் - ஜனாதிபதி மாளிகைக்கு நடிகர் அனுபம்கெர் தலைமையில் பேரணி

Google Oneindia Tamil News

மும்பை: சகிப்புத்தன்மை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி மாளிகைக்கு பேரணியாக சென்றதற்குப் போட்டியாக வருகிற 7 ஆம் தேதி போட்டி பேரணி நடிகர் அனுபம்கெர் தலைமையில் நடக்க உள்ளது.

நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக கூறி எழுத்தாளர்கள், திரையுலகினர் சிலர் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பிக் கொடுத்து வருகின்றனர். திரையுலகினர் இதுபோ செய்வதற்கு பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் விமர்சித்திருந்தார்.

Anupam Kher to lead counter march in Delhi

இந்நிலையில், சகிப்புத்தன்மை தொடர்பாக, காங்கிரஸ் கட்சியினர் ஜனாதிபதி மாளிகைக்கு பேரணி நடத்தியதற்கு போட்டியாக, அனுபம்கெர் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு 7 ஆம் தேதி பேரணி நடைபெறுகிறது.

அதில், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள் கலந்துகொள்கிறார்கள். இதுபற்றிய விவரங்களை இன்று வெளியிடுவதாக அனுபம்கெர் கூறியுள்ளார்.

"சில நேரங்களில் நாம் பேசாவிட்டால், திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய், உண்மை போலவே தோன்றிவிடும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Describing the recent Award Wapsi phenomenon as an attempt to tarnish India's image by a section of filmmakers and actors, actor Anupam Kher has decided to organize a protest march to Rashtrapati Bhavan on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X