ஆந்திராவை பிரித்தால் நக்சல்கள் கை ஓங்கும்- நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து: கிரண்குமார் ரெட்டி

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கூடாது என்பது கிரண்குமார் ரெட்டியின் நிலைப்பாடு. இது தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சரவைக் குழுவை நேற்று நேரில் சந்தித்தார் அவர்.
அப்போது ஆந்திர மாநிலத்தைப் பிரிக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். அதன்பிறகு, ஆந்திர பவனில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக நக்சலைட்டுகள் இருந்து வருவதாகப் பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கெனவே பலமுறற தெரிவித்துள்ளார். மேலும், அந்த இயக்கத் தலைவர்களில் 80% பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.
தற்போது ஆந்திராவை இரண்டாகப் பிரித்தால் நக்சல் அச்சுறுத்தல் மேலும் அதிகரித்துவிடும். அதனால் ஆந்திராவைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முடிவை மத்திய அமைச்சரவைக் குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டால் நீர்ப்பாசனம் முக்கிய பிரச்னையாக உள்ளது. தற்போது நீர்ப்பாசனம் தொடர்பாக கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களுடன் பல பிரச்னைகளை ஆந்திர மாநிலம் எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மாநிலம் பிரிக்கப்பட்டுவிட்டால் தெலுங்கானா, ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களும் கூடுதல் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் 74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடிக்கு உதவும் புதிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச் சூழலில் மாநிலம் பிரிக்கப்பட்டால் இந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவதில் தெலுங்கானா மற்றும் சீமாந்திரா இடையே பிரச்னை தோன்றும். இத் திட்டங்களுக்கான நீர்ப்பாசன விநியோகம், நிதி ஆகியவற்றிலும் பெரிய சிக்கல் ஏற்படும். இத் திட்டங்களுக்கு இதுவரை ரூ.13 ஆயிரம் கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திரமாக இருக்கும்போது வெள்ளக் காலங்களில் கண்காணிப்பதும், நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதும் எளிதாக உள்ளது. ஆனால், மாநிலம் பிரிக்கப்பட்டால் இதுபோன்ற ஒத்துழைப்புக்கு சாத்தியமில்லாமல் போய்விடும். இது நிலைமையை மேலும் மோசமாக்கி விடும் என்றார் கிரண் குமார் ரெட்டி.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications