வாலாட்டும் பாக்...காஷ்மீரில் ட்ரோன்கள் மூலம் துப்பாக்கிகள் ஆயுதங்கள் சப்ளை - ராணுவம் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் அனுப்பி வைத்த துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை ராணுவம் பறிமுதல் செய்துள்ளது.
ஜம்மு காஷீரில் பயங்கரவாதிகளுக்கு ட்ரோன்கள் மூலம் ஆயுத விநியோகத்தை புதிய யுக்தியாக கடைபிடித்து வருகிறது பாகிஸ்தான். கடந்த ஜூன் மாதம் முதல் ட்ரோன்கள் மூலமான இத்தகைய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அக்னூர் செக்டாரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களை வீசப்பட்டது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற ராணுவத்தினர் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றி உள்ளனர்.
3 நாட்களுக்கு முன்னர் ரஜோரி பகுதியில் இதேபோல் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களை விநியோகித்தது பாகிஸ்தான் ராணுவம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications