For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணக்கார மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, மோடியிடம் ரூ.1.26 கோடி சொத்துக்கள்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: 22 கேபினட் அமைச்சர்களில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 17 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர்.

மத்திய அமைச்சர்கள் தங்களின் சொத்து மதிப்பு விவரங்களை வெளியிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அதன்படி மத்திய அமைச்சர்கள் தங்களின் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

இருப்பதிலேயே பாதுகாப்பு மற்றும் நிதி துறை அமைச்சரான அருண் ஜேட்லி தான் பெரும் பணக்காரர் ஆவார்.

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தான் பெரும் பணக்கார அமைச்சர் ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.72.10 கோடி ஆகும்.

மேனகா காந்தி

மேனகா காந்தி

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தியின் சொத்து மதிப்பு ரூ. 37.68 கோடி ஆகும்.

மோடி

மோடி

பிரதமர் நரேந்திர மோடியிடம் ரூ. 1.26 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

வெங்கய்யா நாயுடு

வெங்கய்யா நாயுடு

மத்திய அமைச்சர்களிலேயே குறைந்த அளவு சொத்துக்கள் வைத்திருப்பவர் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு. அவரிடம் ரூ.20.45 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் தான் உள்ளன.

கோடீஸ்வரர்கள்

கோடீஸ்வரர்கள்

22 கேபினட் அமைச்சர்களில் மோடி உள்பட 17 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர்.

லட்சாதிபதிகள்

லட்சாதிபதிகள்

கேபினட் அமைச்சர்களில் வெங்கய்யா நாயுடு, ராம் விலாஸ் பாஸ்வான் (ரூ.39.88 லட்சம்), நரேந்திர சிங் தோமர் (ரூ. 44.90 லட்சம்), ஹர்ஷ்வர்தன் (ரூ. 48.54 லட்சம்), அனந்த் குமார் (ரூ. 60.62 லட்சம்) ஆகிய 5 பேர் மட்டுமே லட்சாதிபதிகள்.

ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சொத்து மதிப்பு ரூ.2.56 கோடி ஆகும். வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் ரூ.2.73 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், ஹரியானாவில் விவசாய நிலமும் உள்ளது.

English summary
Out of 22 cabinet ministers 17 including PM Narendra Modi are crorepatis. Modi has assets worth Rs. 1.26 crore. Defence and finance minister is the richest minister with assets worth Rs. 72.10 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X