Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சும்மா இருந்தாலே போதும்.. மாசம் ரூ. 11,000 வீடு தேடி வரும்.. அருணாச்சலில் பரபர வாக்குறுதிகள்!

Subscribe to Oneindia Tamil

இடா நகர்: அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகையாக வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ஏற்கனனவே ராகுல்காந்தி ரூ.6 ஆயிரம் ஏழைகுடும்பங்களுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளதால் அருணாச்சலில் பட்டதாரிகள் உள்ள ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் மாதம் ரூ.11 ஆயிரம் வரை கிடைக்கும் என தெரிகிறது.

மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. மக்களைவை தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி பல கவர்ச்சிகரமான வாக்குதிகளை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அருணாச்சல பிரதேத்தில் காங்கிரஸ் கட்சி, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களை குறி வைத்து வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது.

வேலைக்கு போகாமல் 11 ஆயிரம்

வேலைக்கு போகாமல் 11 ஆயிரம்

பாஜக ஆட்சி செய்து வரும் அருணாச்சலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் இன்று கவர்ச்சசியான தேர்தல் வாக்குதிகளை அள்ளி வீசியுள்ளது. இந்த தேர்தல் வாக்குறுதிகளின் படி, அருணாச்சல பிரசேதத்தில் வீட்டில் யாரும் வேலைக்கே போகாமலேயே மாதம் ரூ.11 ஆயிரம் வரை வாங்க முடியும்.

பட்டதாரிகளுக்கு உதவி

பட்டதாரிகளுக்கு உதவி

அருணாச்சல் பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவர் டக்காம் சஞ்சய் இன்று இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே ராகுல் காந்தி வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ரூ. 6 ஆயிரம் மாதம் உதவித்தொகை ஏழைகுடும்பங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் ஏழைக்குடும்பத்தில் ஒரு பட்டதாரி இருந்தால், மாதம் ரூ.11 ஆயிரம் உதவித்தொகை ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் அருணாச்சல பிரதேசத்தில் கிடைக்கும்.

உயர்கல்விக்கு உதவித்தொகை

உயர்கல்விக்கு உதவித்தொகை

அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் உயர்கல்வி பயல 20 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டக்காம் சஞ்சய் தெரிவித்துள்ளார். இதேபோல் கிராம தலைவர் மற்றும் கிராம தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் நிதியுதவி (ரூ.2500) ரூ.3000 ஆக அதிகரிக்கப்படும் என்றார்.

பாஜக சூப்பர் வாக்குறுதி

பாஜக சூப்பர் வாக்குறுதி

அருணாச்சல் பிரதேசத்தில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பு காட்டும் பாஜகவும் தன் பங்குக்கு கவர்ச்சியான வாக்குறுதிகளை வீசி வருகிறது. இதன்படி நல்ல சூப்பரான ஐடியாவுடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு ரூ.25 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தரமான கல்வி

தரமான கல்வி

'நிபா டேஸ்' என்ற பெயரில் பாஜக வெளியிட்டுள்ள கல்வி தொடர்பான வாக்குறுதியில், சிறப்பான கல்விக்கூடங்களை கட்டி, அதில் தரமான கல்வியினை வழங்குவோம் என தெரிவித்துள்ளது. இதன்படி 12ம் வகுப்பு வரை இலவச யூனிபார்ம், நோட்டு புத்தகங்கள், புத்தகம் வைக்க பைகள், காலணிகள் என அனைத்தும் 12ம் வகுப்பு வரை இலவசமாக வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது. தலைசுற்றவைக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கும் இந்த வாக்குறுதிகளை கேட்டு அருணாச்சல் பிரதேச மக்கள் ஆடித்தான் போய் இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+