For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அருணாசலப்பிரதேசத்தில்.. சீன ராணுவத்தால் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தகவல்.. போலீஸ் தீவிர விசாரணை

Google Oneindia Tamil News

இட்டாநகர்: அருணாசலப்பிரதேசத்தை சேர்ந்த 5 இந்தியர்கள் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.இணையத்தில் வெளியான செய்தியை தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Recommended Video

    Arunachal Pradesh-ல் நுழைந்து 5 இந்தியர்களைக் கடத்திய China Army | Oneindia Tamil

    லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே இடையே ரஷ்யாவில் ஆலோசனை நடந்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் எல்லையில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இதன்பின்தான் எல்லையில் பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. லடாக்கில் நடக்கும் பிரச்சனைக்கு முழுக்க முழுக்க சீனாதான் காரணம் என்று இந்தியா உறுதியாக தெரிவித்துவிட்டது.

    தமிழகத்தில் இதற்கும் மேல் தளர்வா? அரசு எடுக்க போகும் அதிரடி முடிவு.. எதற்கெல்லாம் அனுமதி தரப்படும்? தமிழகத்தில் இதற்கும் மேல் தளர்வா? அரசு எடுக்க போகும் அதிரடி முடிவு.. எதற்கெல்லாம் அனுமதி தரப்படும்?

    கடத்தல் புகார்

    கடத்தல் புகார்

    இந்த நிலையில் அருணாசலப்பிரதேசத்தை சேர்ந்த 5 இந்தியர்கள் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.இணையத்தில் வெளியான செய்தியை தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் புகார் அளித்ததாக செய்திகள் வெளியாகி வருகிறது.

    எங்கே கடத்தல்

    எங்கே கடத்தல்

    இவர்களின் குடும்பத்தினரிடம் போலீசாரை விசாரணை நடத்தி வருகிறார்கள். அருணாசலப்பிரதேசத்தில் உள்ள நாச்சோ கட்டுப்பகுதியில் வேட்டையாடும் போது 5 பேரும் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளார். கடத்தப்பட்டதாக கூறப்படும் எல்லோரும் தகின் என்ற ஒரே குழுவை சேர்ந்தவர்கள். இவர்கள் அங்கே வேட்டையாடுவதை வழக்கமாக வைத்து இருப்பார்கள்.

    புகுந்து கடத்தல்

    புகுந்து கடத்தல்

    எல்லையில் இரண்டு பேர் கடத்தல் முயற்சியில் இருந்து தப்பித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்திய ராணுவம் இந்த செய்தியை உறுதி செய்யவில்லை. அதேபோல் அருணாசலப்பிரதேச போலீசும் இந்த செய்தியை உறுதி செய்யவில்லை. தற்போது இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    என்ன விளக்கம்

    என்ன விளக்கம்

    இது தொடர்பாக அருணாசலப்பிரதேச போலீஸ் அளித்துள்ள விளக்கத்தில், இந்த விஷயம் மிகவும் முக்கியமானது. உடனடியாக இதில் எதையும் அறிவிக்க முடியாது. உரிய விசாரணை நடத்த வேண்டும். அதனால்தான் முறையாக புகார் கூட பதியவில்லை. நேரில் சென்று விசாரிப்போம். பின் சம்பவம் நடந்த இடத்திற்கும் செல்வோம். அதன்பின்பே உண்மை என்ன என்பது குறித்து தெரியவரும், என்று கூறியுள்ளனர்.

    English summary
    Police start probe after report says 5 men kidnapped by China's PLA army in Arunachal Pradesh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X