மோடியை சைக்கோ, கோழை என்று கூறியதற்கு வருந்தவில்லை: கேஜ்ரிவால் பேச்சால் சர்ச்சை
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சைக்கோ, கோழை என்று கூறியதற்காக வருத்தப்படவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. டெல்லி கிரிக்கெட் சங்க ஊழலில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு தொடர்பு இருப்பதாகவும் இது தொடர்பான கோப்புகளை கைப்பற்றவே தமது அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியாக கேஜ்ரிவால் டுவிட்டரில் கடுமையாக சாடியிருந்தார்.

மேலும், அவர் கூறுகையில், "அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாமல், இந்த கோழைத்தன நடவடிக்கையை மோடி தூண்டிவிட்டுள்ளார்" இவ்வாறு கேஜ்ரிவால் கூறியிருந்தார். அதையடுத்து கேஜ்ரிவால் மேலும் சில டிவிட்டுகளை வெளியிட்டார். அவற்றில், மோடி ஒரு கோழை, ஒரு சைக்கோ. சிபிஐ எனது அலுவலகத்தை சோதனை இட்டு, கோப்புகளை பார்வையிட்டது, ஆனால் இல்லை என பொய் சொல்கிறது.
இந்நிலையில் இன்று ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கேஜ்ரிவால் கூறுகையில், மோடியை சைக்கோ, கோழை என்று கூறியதற்காக வருந்தவில்லை. நானும் மனிஷ் சிசோடியாவும் பிரதமரை சந்தித்தோம். அப்போது, பிரதமரிடம் நான் உங்கள் குழந்தையை போன்றவன். தயவு செய்து எனக்கு வழிகாட்டுங்கள் என்றேன். அவர் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார்.
நான் பிரதமருக்கு எதிராக மோசமான வார்த்தையை பயன்படுத்தியதை ஏற்றுக்கொள்கிறேன். அவை என் இதயத்தில் இருந்து வந்தவை. இதற்காக நான் வருத்தம் தெரிவிக்க போவது இல்லை. பிரதமர் மோடி மலர்கள் போன்ற மென்மையான வார்த்தையை பயன்படுத்துகிறார். ஆனால் அவருடைய செயல்கள் மோசமாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications