பார் இல்லை, சரக்கும் இல்லை... தமிழகம், கர்நாடகாவுக்கு படையெடுக்கும் கேரளத்து "பீர்"பால்கள்!
திருவனந்தபுரம்: கேரளாவில் பார்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதாலும், கோடை காலத்து தேவையை நிறைவேற்ற முடியாமலும் கேரள மாநில மது கழகம் தடுமாறி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு வந்து பீர் உள்ளிட்டவற்றை வாங்குவது அதிகரித்துள்ளதாம்.
கோடை கால தாக சாந்திக்காக 38 லட்சம் கேஸ் பீர்களுக்கு அது ஆர்டர் கொடுத்திருந்ததாம். ஆனால் 22 லட்சம் கேஸ்கள்தான் வந்துள்ளதாம். இதை வைத்துக் கொண்டு சமாளிப்பது மிகவும் கஷ்டம் என்று கூறுகிறார் மதுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனில் சேவியர்.

பீர் மற்றும் ஒயின் தேவை அதிகரித்து வருவதாலும், கோடை காலம் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதாலும் சமாளிப்பது சிரமமாக உள்ளது. இதனால் வெளி மாநிலங்களிலிருந்து வாங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
ஆனால் அனைத்து மாநிலங்களிலுமே தற்போது கோடைகாலம் என்பதால் அங்கிருந்து பெறுவதிலும் சிக்கல் இருப்பதாக சேவியர் கூறுகிறார்.
தற்போது கேரலாவில் 499 பீர் மற்றும் ஒயின் பார்லர்கள் உள்ளன. பார்களை மூடும் அரசின் முடிவைத் தொடர்ந்து 300 பார்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. பல பார் உரிமையாளர்கள் பீர், ஒயின் உரிமத்திற்காக உயர்நீதிமன்றத்தை நாடி வருகின்றனர்.
இதற்கிடையே மதுத் தேவைக்காக தமிழகம் மற்றும் கர்நாடகத்தை மதுப் பிரியர்கள் நாடி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழக எல்லையோரங்களில் உள்ள நகரங்களுக்கு கேரளாவிலிருந்து நிறையப் பேர் வந்து மது வாங்குகின்றனராம். அதேபோல கர்நாடகத்திலிருந்தும் நிறைய சப்ளை ஆகிறதாம்.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications